Thursday, June 25, 2020

கைது செய்ய வழிமுறைகள் என்ன? டி.ஜி.பி., திரிபாதி சுற்றறிக்கை!

துாத்துக்குடி மாவட்டத்தில், போலீஸ் தாக்கியதில், தந்தை, மகன் இறந்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், கைது நடவடிக்கையின் போது, கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து, டி.ஜி.பி., திரிபாதி, சில உத்தரவுகள் பிறப்பித்துள்ளார்.

இதுதொடர்பாக, ஐ.ஜி.,க்கள், எஸ்.பி.,க்கள் மற்றும் கமிஷனர்களுக்கு நேற்று அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

* போலீசார் அனைவரும், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து, தங்களையும், குடும்பத்தினரையும் தற்காத்து கொள்ள வேண்டும்.

* கொடூர குற்றங்களில் ஈடுபடுவோர் தவிர, 60 வயதுக்கும் மேற்பட்டவர்களை கைது செய்வதை, கூடுமானவரை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.

* விசாரிப்பதற்கும், கைது செய்வதற்கும் குறைந்தபட்ச போலீசாரையே பயன்படுத்த வேண்டும்.

* கைது நடவடிக்கைக்கு, கைதிகளுக்கான வழிகாவல் உள்ளிட்ட பணிகளுக்கு, 50 வயதுக்கும் மேற்பட்ட போலீசாரை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும்.

* போலீசார் அனைவரும், முக கவசம், கையுறை அணிந்து இருக்க வேண்டும். கைது செய்யப்படும் நபருக்கும், அவற்றை அணிவிக்க வேண்டும்.

* கைது செய்யப்படும் நபருக்கு கட்டாயம், கொரோனா இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

* கிருமி நாசினி தெளிக்கப்பட்ட வாகனத்தையே பயன்படுத்த வேண்டும்.

* கைது செய்யப்படும் நபரை தொடக்கூடாது; அவரிடம் இருந்து, சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

* போராட்டங்களில் ஈடுபடுவோரை கைது செய்யும் போதும், மேற்கண்ட விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்..

* கூட்டத்தை கட்டுப்படுத்த பயன்படுத்தும், கயிறு உள்ளிட்ட பொருட்கள் மீது, கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.

* கைது செய்யப்படும் நபர்கள் பயன்படுத்தும், கழிப்பறை, வாளிகளுக்கு கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.

* கைது செய்யப்படும் நபரை, காற்றோட்டமான இடத்தில், 2 மீட்டர் இடைவெளியில் விசாரிக்க வேண்டும்.

* கைதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, 'வீடியோ கான்பரன்ஸ்' முறையை பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

 கைது செய்ய வழிமுறைகள் என்ன?  டி.ஜி.பி., திரிபாதி சுற்றறிக்கை!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...