Tuesday, June 30, 2020

*இது மதம் அல்ல ஒரு அற்புதமான வாழ்க்கை முறை..!*

கொரோனா வைரஸ்களை தடுக்கும் நமது பாரம்பரிய வாழ்க்கைமுறை...!
இன்று உலகமே திரும்பி பார்த்து வியக்கும் நமது இந்துக்களின் பாரம்பரிய வாழ்க்கைமுறை...!
இந்த கொரோனா மட்டுமல்ல இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு புதியதாக வரும் வைரஸ்களை தடுக்கும் நமது பாரத நாட்டின் பாரம்பரிய வாழ்க்கைமுறை பற்றி பார்ப்போம்.
நோய்கள் வராமல் தடுக்கவும், வந்தால் பரவாமல் இருக்கவும் ஏற்படுத்தப்பட்ட நடைமுறைகள் தான் சம்பிரதாயம் என்பது.
இது மூடநம்பிக்கை அல்ல என்பதை நாம் அனைவரும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
இவைகள் அனைத்தும் நமக்கு தெரிந்த பாட்டி வைத்தியம், சித்த, ஆயுர்வேத, இயற்கை மருத்துவ விஷயங்கள் தான்.
தனிநபர் கடைப்பிடிக்க வேண்டியவை..!
உணவு சாப்பிடும் முன் கை கால் முகம் முழுவதும் நன்றாக தேய்த்து கழுவி விட்டு வர வேண்டும்.
உணவு உண்ணும் போது நன்றாக மென்று உமிழ்நீருடன் கலந்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் பெறும்.
தினசரி வாழை இலை, தாமரை இலையில் உணவு சாப்பிடுவது நல்லது.
உணவு சாப்பிட்டு முடித்ததும் வெற்றிலை பாக்கு போடுவது நல்லது.
மண் பாணை மற்றும் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து தினமும் குடிப்பது மிகவும் ஆரோக்கியமானது.
இரவு உணவை குறைத்து பழங்களை சேர்த்துக் கொள்வது சிறந்தது.
தினசரி உணவில் மிளகு, சீரகம், கொத்தமல்லி, இஞ்சி பூண்டு, கருவேப்பிலை, கடுகு, பெருங்காயம் போன்ற மூலிகைகளை அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
உணவில் தானிய வகைகள் மற்றும் கீரைகள் காய்கறிகள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் பாரம்பரிய மரச்சக்கு எண்ணெய்யை உணவில் பயன்படுத்துவது நல்லது.
உணவில் கல் உப்பு, இந்து உப்பு சேர்த்து கொள்வது நல்லது.
நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும் சோளம், கம்பு, திணை, கேழ்வரகு, குதிரை வாலி, சாமை போன்ற உணவுகள் அதிக அளவில் சேர்த்து கொள்ள வேண்டும்..
பாரம்பரிய மூலிகை ரசம் (செலவு ரசம்) உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்..
நாம் வாரத்தில் இரண்டு முறை எண்ணெய் தேய்த்து குளிப்பது அவசியம்.
நம் குழந்தைகளுக்கு தெவளை பொடி கொண்டு குளிப்பது நல்லது.
பெண்கள் அனைவரும் மஞ்சள் தேய்த்து குளிப்பது அவசியம். தினமும் மல்லி முல்லை போன்ற மருத்துவ குணம் கொண்ட மலர்களை தலையில் சூடுவது நல்லது.
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மருதாணி இலைகளை அரைத்து கை கால்களில் வைத்துக் கொள்ளுதல் நல்லது.
அனைவரும் தலைக்கு குளிக்கும் போது அரப்பு சீகக்காய் பயன்படுத்துவது நல்லது.
தலைக்கு குளித்த பின்னர் தூபம் போட்டு கொள்வது நல்லது.
நாம் அனைவரும் தவறாமல் நெற்றியில் திருநீறு சந்தனம் குங்குமம் திருமன்(நாமம்) போன்ற கிருமிகளை ஒழிக்கும் சமயச் சின்னம் அணிய வேண்டும்..
நாம் வெளியில் இருந்து வரும் பொது கை கால் முகம் முழுவதும் தேய்த்து கழுவி விட்டு வீட்டுக்குள் நுழைய வேண்டும்..
வாரம் இருமுறை கல் உப்பு வர மிளகாய் கொண்டு திருஷ்டி சுத்தி போடுவது நல்லது.
இரவில் நீண்ட நேரம் கண் விழித்து மொபைல்போன், டிவி, கம்ப்யூட்டர், போன்றவைகளை பார்ப்பதை தவிர்த்து நேரத்தில் உறங்க வேண்டும், அப்போதுதான் அதிகாலையில் 4 மணி முதல் 6 மணிக்குள் எழுந்து மூச்சுப் பயிற்சி செய்து அதிகப்படியான பிராண சக்தியை பெறமுடியும்.
நல்ல காற்றோட்டம் உள்ள இடத்தில் உறங்கும் போது நம் உடலுக்கு தேவையான அளவு பிராண சக்தி கிடைக்கும்.
தினசரி காலை அல்லது மாலை வேளையில் யோகா பிராணயாமம் பயிற்சி அல்லது நடைப்பயிற்சி, உடல் பயிற்சி செய்வது அவசியம்.
வாரம் இருமுறை வேப்பிலை, வில்வம், துளசி, நிலவேம்பு, ஆடாதோடை, கண்டங்கத்தரி போன்ற மூலிகை இலையை மிளகு உடன் சேர்த்து உண்பது நல்லது.
எப்போதுமே உடலையும் மனதையும் சமநிலையில் வைத்திருக்கும் ருத்ராட்சம், துளசி மாலை, படிக மாலை, கருங்காலி மாலைகளை நம் கழுத்தில் அணிந்து இருப்பது நல்லது.
தங்கம், வெள்ளி, செம்பு, ஐம்பொன் போன்ற எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆபரணங்கள் அணிவது நல்லது.
தினமும் இருமுறை மலம் கழித்து,
வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளித்து,
மாதம் இருமுறை மட்டும் உரவு கொண்டு,
வருடம் இருமுறை பேதி மருந்து எடுத்துக் கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம்.
வீட்டில் கடைபிடிக்க வேண்டியவை…!
தினமும் காலையில் சாணம் கொண்டு வாசல் தெளிப்பது மிக முக்கியமான ஒன்று.
வீட்டில் வாரம் இருமுறை மாலை வேளையில் தூபம் போட்டு (சாம்பிராணி) வருவது தீய கிருமிகளை அழிக்கும்.
வீட்டு வாசலில் எலுமிச்சை மிளகாய் படிகக்கல் (திருஷ்டி) கொண்டு கட்டுவது..
வீட்டு வாசலில் மாலை வேளையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வைப்பது..
வீட்டில் நாட்டு மாடுகள் வளர்ப்பது.
வீட்டில் வாரம் இருமுறை நாட்டு மாட்டின் கோமயம் தெளிப்பு.
வீட்டில் வாரம் ஒருமுறை மஞ்சள் தூள் நீரில் கலந்து வேப்பிலையால் தெளிப்பது.
வீட்டை மாதம் இருமுறை சாணம் இட்டு வழிப்பது.
வீட்டை சுத்தம் செய்து வருடம் இருமுறை சுண்ணாம்பு கொண்டு பூசுவது..
வீட்டில் வருடம் ஒருமுறை மந்திரங்களை உச்சரித்து மூலிகை பொருட்களை கொண்டு ஹோமம் வளர்ப்பது நல்லது. (யாகம் செய்வது)
வீட்டின் உள்ளே எல்லா இடங்களிலும் சரியான சூரிய ஒளி மற்றும் காற்றோட்டம் உள்ள படி (வாஸ்து) வீட்டு அறைகள் மற்றும் ஜென்னல்கள் அமைந்திருக்க வேண்டும்..
வீட்டில் பூஜை அறையில் தினசரி தீய கிருமிகளை விரட்டும் நல்லெண்ணெய் தீபம், மணி ஓசை மற்றும் சங்கு நாதம் கேட்டு கொண்டு இருக்க வேண்டும்..
வீட்டில் தென்னை, வேம்பு, புங்கை, முருங்கை, வாழை, பப்பாளி, கருவேப்பிலை, துளசி, போன்ற எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மரங்களை வளர்க்க வேண்டும்..
மக்கள் கூடும் இடங்களில் கடைப்பிடிக்க வேண்டியவை….! (திருவிழா, விசேஷங்கள்)
நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்திக்கும் போது இரு கைகளையும் மார்புக்கு அருகில் வைத்து வணக்கம் தெரிவித்தல் வேண்டும்.
கோவில் மற்றும் வீடுகளில் மந்திரங்களை உச்சரித்து மூலிகை பொருட்களை கொண்டு ஹோமம் வளர்ப்பது. (யாகம் செய்வது)
கோவில் மற்றும் வீதியெங்கும் தூபம் போட்டு (சாம்பிராணி) சுவாசிக்கும் காற்றை சுத்தம் செய்து வருவது.
கோவில்களில் தீய கிருமிகளை விரட்டும் மணி ஓசை மற்றும் சங்கு நாதம் தினசரி கேட்டு கொண்டு இருக்க வேண்டும்..
கோவில் மற்றும் வீடுகளில் பச்சை மட்டை, வாழைக்கம்பம், தென்னகுருத்து கட்டுதல்.
கோவில்கள் மற்றும் வீதியெங்கும் மாவிலை, வேப்பிலை தோரணம் கட்டுவது.
ஊர்கள் தோறும் திருவீதி உலா, மாவிளக்கு வழிபாடு, அக்னி குண்டம், கரகம் எடுத்து வருதல், பந்தசேவை, மஞ்சள் நீராட்டு விழா, பஜனை நிகழ்ச்சி நடத்துவது.
ஒலிபெருக்கி மற்றும் ஒலி ஏற்படுத்தும் வாத்திய இசை கருவிகள் வாசித்தல்..
ஒளி ஏற்படுத்தும் வெடி சத்தத்துடன் வான வேடிக்கைகள் நடத்துவது.
இவையனைத்தும் உங்களுக்கு ஓர் எடுத்துக்காட்டே ஆகும். இது போல பல வாழ்கை நடைமுறைகளை நாம் தினமும் கடைபிடித்து வருகின்றோம்.
நோய்கள் வராமல் தடுக்கவும், வந்தால் பரவாமல் இருக்கவும் ஏற்படுத்தப்பட்ட நடைமுறைகள் தான் சம்பிரதாயம் என்பது.
*நமது தர்மம் பல உண்மையான அர்த்தங்களை உள்ளடக்கியது இது மதம் அல்ல ஒரு அற்புதமான வாழ்க்கை முறை… “இதுவே சனாதன தர்மம்….”*
*ஆரோக்கிய வாழ்க்கைக்கு இந்து சமய விழிப்புணர்வு அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்...!*

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...