Sunday, June 28, 2020

உண்டு!வங்கிகள் அனைத்தும் இன்றும், நாளையும்....

சென்னை உட்பட, முழு ஊரடங்கு அமலில் உள்ள மாவட்டங்களில், வங்கிகள் அனைத்தும், இன்றும், நாளையும் இயங்கும். மாதக் கடைசி என்பதால், குறைந்த ஊழியர்களுடன், இந்த இரண்டு நாட்களிலும், அனைத்து வங்கிகளும், மாலை, 4:00 மணி வரை செயல்பட, அரசு அனுமதி அளித்துள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுக்க, சென்னையிலும், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில், குறிப்பிட்ட சில பகுதிகளிலும், 19ம் தேதி முதல், நாளை வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

முடங்கினர்
அதன் தொடர்ச்சியாக, மதுரை மாவட்டத்தில், மதுரை மாநகராட்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும், 24ம் தேதியிலிருந்து, 30ம் தேதி வரை, முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பின், தேனி மாவட்டத்தில் சில பகுதிகளில், அம்மாவட்ட கலெக்டரால், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. எனினும், பொது மக்கள் நலன் கருதி, காய்கறிகள், மளிகைக் கடைகள், காலை முதல் பகல், 2:00 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டீக்கடைகள் போன்றவை திறக்க, அனுமதி வழங்கப்படவில்லை.இந்நிலையில், நேற்று இப்பகுதிகளில், மருந்து கடைகள் தவிர, அனைத்து கடைகளும் மூடப்பட்டு, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை; மக்கள் வீடுகளில் முடங்கினர்.

இன்று பகல், 2:00 மணி வரை, அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறந்து இருக்கும். எனினும், பொதுமக்கள், 2 கிலோ மீட்டர் துாரத்திற்குள் நடந்து சென்று, பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பகுதிகளில், 26ம் தேதி வரை, அனைத்து வங்கிகளும், 33 சதவீத ஊழியர்களுடன், காலை, 10:00 முதல், பிற்பகல், 2:00 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. ஊழியர்கள், சுழற்சி முறையில் பணிக்கு வந்தனர்.


நிபந்தனை


பெட்ரோல் நிலையங்கள், காஸ் ஏஜன்சிகளிடம் மட்டுமே, ரொக்க பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனைகளுடன், வங்கிகள் செயல்பட்டன. பொதுமக்களின், நேரடி வங்கி சேவைக்கு அனுமதி தரப்படவில்லை. ஏ.டி.எம்., இயந்திரங்களுக்கு பணம் எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில், மாதக் கடைசி என்பதால், இன்றும், நாளையும், 33 சதவீத ஊழியர்களுடன், அனைத்து வங்கிகளும், மாலை, 4:00 மணி வரை, வழக்கம் போல செயல்படும்; பொதுமக்கள் சேவைக்கும், அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாளை மறுதினம், அரசு அறிவிக்கும் ஊரடங்கை பொறுத்தே, வங்கிகள் தொடர்ந்து செயல்படுமா என்பது தெரிய வரும். இது குறித்து, வங்கி அதிகாரிகள் கூறுகையில், 'வங்கிகள் இன்றும், நாளையும் வழக்கம் போல, மாலை வரை செயல்படும். 'ஒரு வாரமாக வாடிக்கையாளர்களுக்கு, நேரடி சேவை கிடையாது. அதனால், யாரும் வரவில்லை. இன்று அனுமதி உண்டு என்பதால், அதிகமானோர் வங்கிகளுக்கு வரக் கூடும்' என்றனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...