Thursday, June 18, 2020

சிந்திக்க சில வரிகள் :

ஒரு செயலை செய்வதற்கு முன்னர் நம் மனதில் எழும் ஒரு கேள்வி நம்மை பல்வேறு எண்ணங்களில் திசை திருப்பி அச்செயலை செய்ய விடாமல் தடுத்து விடும். அது என்ன கேள்வி?
இதை செய்தால் அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள்? இப்படியே பல பேரு யோசித்து யோசித்து தான் செய்ய வேண்டிய நல்ல செயல்களிலிருந்து பின்வாங்கி கொண்டிருக்கிறார்கள். இது சரியா?
ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் இந்த உலகத்தில் எல்லோராலும் எல்லோரையும் திருப்திபடுத்த முடியாது. மேலும் நீங்கள் ஒரு செயலை செய்ய வேண்டும் என்று எண்ணும் பொழுது அது சரியா? தவறா? என்று உங்கள் மனதில் கேள்வி எழுப்பி ஆராய்ந்து பாருங்கள். கண்டிப்பாக நல்லதொரு தீர்வு கிடைக்கும்.
ஏனென்றால் நம் மனசாட்சியை விட மிகச்சிறந்த நீதிபதி இந்த உலகத்தில் யாருமே கிடையாது. மேலும் இது தொடர்பாக உங்களுக்கு பக்கபலமாக இருக்கக்கூடிய இரண்டு நபர்களிடம் கலந்துரையாடி உங்களுடைய முடிவினை சரி செய்துக் கொள்ளுங்கள். பின் தைரியமாக செயலில் இறங்குங்கள். அனைவரையும் திருப்தி படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு நாளும் நீங்கள் செய்ய விரும்பும் நற்காரியங்களில் இருந்து பின் வாங்காதீர்கள்.
நல்ல சிந்தனையோடு,நல்ல செயல்களை செய்ய இந்த நாள் இனிய நாளாக எல்லோருக்கும் அமையட்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...