Monday, June 22, 2020

இது ஒரு முக்கியமான எச்சரிக்கை .

யூஸ் பண்ணிகிட்டு இருக்கற கட்டில் பழசா போச்சு, இதை வித்துட்டு இன்னும் கொஞ்சம் பணத்தை போட்டு நியூ மாடல்ல ஒண்ணு வாங்கலாம்னு நினைச்சு ஓஎல்எக்ஸ்ல விளம்பரத்தை போட்டு அதனோட விலை 12 ஆயிரம்னு போடறாரு சென்னையில் இருக்கற ஒருத்தரு. அந்த விளம்பரத்தை பார்த்த லோக்கல் ஆள் அந்தநெம்பருக்கு கால் பண்ணிட்டு விலாசம் வாங்கிட்டு வீட்டுக்கு வந்து கட்டிலை பார்த்துட்டு 9 ஆயிரம் ரூபாய்க்கு கேஷ் கொடுத்துட்டு உடனே எடுத்துக்கறேன்னு சொல்றாரு.
ஆனா அந்த விலைக்கு விக்கறதுக்கு விளம்பரம் போட்டவர் விரும்பலே. இன்னும் நல்ல விலைக்கு போகும்னு எதிர்பார்த்துகிட்டு இருந்தப்போ ஒருத்தர் தான் ராணுவத்திலே பணிபுரியறதா சொல்லிட்டு இவர் அதை நம்பனும்கிறதுக்காக அவரோட அடையாள அட்டையை வாட்ஸ்அப்ல அனுப்பிவிடறாரு. அந்த கட்டில் தனக்கு பிடிச்சுப்போனதாகவும் அது தனக்கு வேணும்னும் கால் பண்ணி கேட்கறார். நான் வெளியூர்ல இருக்கறேன். வர்றதுக்கு ஒருமாசம் ஆகும். நீங்க சொன்ன விலைக்கே எடுத்துக்கறேன். பணத்தை ஆன்லைன்ல அனுப்பிடறேன், உங்க அக்கவுன்ட் நெம்பர் டீடெய்ல் அனுப்புங்கன்னு சொன்னவுடன், ஆஹா நாம எதிர்பார்த்த ரேட் கிடைச்சுடுச்சுன்னு இவரோட பேங்க் டீடெய்ல் அனுப்ப அந்த நபர் ஒரு க்யூஆர் கோடு (QR code) இவரோட வாட்ஸ் அப் நெம்பருக்கு அனுப்பறாரு. அனுப்பிட்டு இந்த QR code ஸ்கேன் பண்ணுங்க. டெஸ்ட் பண்றதுக்காக உங்களுக்கு இப்போ இதுல 10 ரூபாய் அனுப்பியிருக்கேன். ரிசீவ் ஆனதும் மீதி 11990 ரூபாயை இதேபோல அனுப்பிடறேன்னு சொல்ல இவரும் அந்த QR Code ஐ ஸ்கேன் பண்ணதும் இவரோட அக்கவுன்ட்ல 10 ரூபாய் கிரடிட் ஆகியிருக்கு.

சந்தோஷப்பட்ட மனுஷன், தான் மிகப்பெரிய மோசடியில் சிக்கப்போறோம்னு தெரியாம உடனே அவருக்கு கால்பண்ணி விஷயத்தை சொன்னதும் அவரு மீதித்தொகைக்கு இன்னொரு QR code அனுப்பறாரு. அதை ஸ்கேன் பண்ணதும் 10 ஆயிரம் ரூபாய் இவரோட அக்கவுன்ட்ல இருந்து அவருக்கு போயிடுச்சு. இவர் பதறிப்போய் அந்த நபருக்கு கால்பண்ணதும், சாரி சார் QR code ஐ தவறா மாத்தி அனுப்பிட்டேன், உங்க பணமும் எனக்கு வந்த பணத்தையும் உடனே அனுப்பிடறேன், நீங்க நான் ‍மறுபடியும் அனுப்பப்போற QR code ஐ ஸ்கேன் பண்ணிட்டா உங்க அக்கவுன்ட்டுக்கு கிரடிட் ஆகிடும்னு சொல்லி ஒரு QR code அனுப்ப மீண்டும் 40 ஆயிரம் இவர் அக்கவுன்ட்ல டெபிட் ஆயிடுச்சு. அதோட ஆட்டம் முடிஞ்சுது. மொத்தத்துல 50 ஆயிரம் காலியாயிடுச்சு.
கொடுத்த நெம்பருக்கு கால் பண்ணா அந்த நெம்பர் ப்ளாக். மனுஷன் கடந்த ஒரு வாரமா வீட்டுக்கும் சைபர் க்ரைம் காவல்நிலையத்துக்குமா நடந்து கிட்டு இருக்காரு. ஏமாத்தனவர் பத்தி ஒரு தகவலும் கிடைக்கலே. 9ஆயிரத்துக்கு வித்திருந்தா பிரச்சனை சால்வ்டு. அதிகமா கிடைக்குமேன்னு ஆசை. இவர் மட்டுமில்லே. கடந்த சில நாட்கள்ல சென்னையில் மட்டும் QR code மூலமாக 22 பேர் இப்படி ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என சைபர் க்ரைம் பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. படித்த படிக்காத விவரமறிந்த நிறைய பேரு டெக்னாலஜி தெரிந்த கிரிமினல்களால் இப்படி ஏமாற்றப்படுகின்றார்கள். டெக்னாலஜி சார்ந்த நூதன மோசடிகள் நாள்தோறும் அரங்கேறிக்கிட்டே இருக்கு. நாம தான் ரொம்ப எச்சரிக்கையா இருக்கனும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...