Tuesday, June 30, 2020

ஜப்தி எடுத்த வீட்டை எல்லாம் திருப்பி தந்த உத்தமருக்கு இந்த நாட்டையே அளித்த மக்கள்.

🌺நாம் திரும்பி வரும் போது இந்த ராமவரம் தோட்டம் ஜப்தி ஆயிருக்கும் தன் உதவியாளர் குஞ்சப்பனிடம் சொல்லி சிரித்து கொண்டே நடையை கட்டினார் மக்கள் திலகம்
🌷என்னங்க இவ்வளவு பெரிய விசயத்தை சர்வ சாதாரணமாக கூறுகிறேர்களே? பின்னே எப்படி சொல்வது அழுது கொண்டே சொல்வதா?
💐ஈட்டிய பொருளை போட்டி போட்டு கொண்டு கொடுத்த வள்ளலுக்கா இந்த கதி என்ன செய்வது சொந்தமா படம் எடுத்தால் எல்லோருக்கும் இந்த கதி தான் என்றார் மக்கள் திலகம்
💚வெளிநாட்டு படப்பிடிப்பு என்றால் எல்லா செலவும் நம்மை சேர்ந்தது தான் #உலகம்சுற்றும்வாலிபன் பட சூட்டிங்கின் போது ஒரு நடிகை ஐஸ்க்ரீம் கேட்டார்கள் என்று செட்டில் உள்ள அனைவருக்கும் வாங்கி கொடுத்ததில் செலவு ஐஸ்க்ரீம் மட்டும் ரூபாய் 84000 இது 1972 ஆண்டு
🍁சிறப்பாக புத்தர் கோயில் செட் போட்டதற்கு மூன்று மடங்கு தொகை கொடுத்தேன் இரவு விடுதியை காலி செய்யும் போது இரவு சாப்பாட்டு பில்லை பார்த்ததும் மற்றவர்களுக்கு மயக்கமே வந்து விட்டது
🌷செய்ததை நான் சொல்லி காட்டுபவன் அல்ல அவர்கள் என் மீது செலுத்திய அன்பும் நம்பிக்கையும் தான் என்னை தாராள மனிதனாக மாற்றியது
🌺அனேகமாக குஞ்சப்பன் ஸ்டே வாங்கி இருக்கனும் இல்லை சத்தியா தோட்டம் தான் நம் வீடு என சலனமில்லாமல் சொல்லி விட்டு அன்றைய நாளிதழை புரட்ட. தொடங்கினார் எம்ஜிஆர்
🍁எப்படி சமாளிக்குறீர்கள்? மக்கள் நினைத்து விட்டார்கள் என்னை பெரிய செல்வந்தன் என்று
வாழ்க்கையில் எது நடந்தாலும் மக்களை பார்த்த உடன் உதட்டோரம் மலரும் புன்னகையை நினைத்தே மகிழ்ச்சி தேடுகிறேன்.
🍂மனதில் ஒரு மாடி வீட்டு ஏழையாக எண்ணி ஏசி வச்ச காரில் பயணிக்க வைத்தவர்கள் என் மக்கள் என் அம்மா ரெண்டனா பணத்தில் எங்களை வளர்த்தார்கள் இன்று நான் 2 ரூபாயில் வாழ கற்றுக் கொண்டேன்
🌸என் மக்கள் என்னை ஏழை ஆக்க மாட்டார்கள் அவ்வளவு பண் பட்ட நம்பிக்கை அதற்கான நீதிக்கு தலை வணங்கியே ஆகனும்
🍀ஆகா. இதிலே ஒரு படத்தின் தலைப்பே கிடைத்து விட்டதே! இன்னலில் இருக்கும் எத்தனையோ பேர்களுக்கு வீடுகளை ஜப்தியில் இருந்து மீட்டி உதவி செய்த வள்ளலுக்கு நாட்டையே ஆள கையில் கொடுத்தனர் இன்றும் மக்கள் மனங்களில் மங்கா புகழுடன் ஆட்சி செய்யும்
மீண்டும் சந்திக்கும் வரை.

Image may contain: 4 people, people standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...