Wednesday, June 10, 2020

மீண்டும் பதவி ஆசையில் உயிரை விட்டவர்.

அவருக்கு தெரியும் தான் ஒரு இதய நோயாளி என்று!!
அவருக்கு தெரியும் தான் இரண்டு பெரிய அறுவை சிகிச்சை செய்து கொண்டவன் என்று!!
அவருக்கு தெரியும் கொரோனா ஒரு உயிர் கொல்லி நோய் என்று!!!
அவருக்கு தெரியும் பிறரை காட்டிலும் தன்னை போன்ற நபருக்கு அந்த நோய் வந்தால் பிழைப்பது மிக கடினம் என்று!!!
அவருக்கு தெரியும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உயிர் பிரிந்தால் நிச்சயம் தன் மனைவி, மக்களுக்கு கூட தன் பிணத்தை காட்ட மாட்டார்கள் என்று!!!
அவருக்கு தெரியும் ஒருவேளை தான் கொரோனா போரில் இறந்தால் தன் இறுதி சடங்கு கூட நடக்காது என்று!!!
அவருக்கு தெரியும் கொரோனா நோயால் உயிர் பிரிந்தால் தனக்கு விடை கொடுக்கவும், தன் பூதவுடலை கட்டியணைத்து அழவும் கூட யாரும் இருக்க மாட்டார்கள் என்று...
அவருக்கு தெரியும் இந்த நோயில் தான் மாண்டாள் தன் மனதுக்கு நெருக்கமான நபர்களின் கண்ணீர் கூட தன் மேல் விழாது என்று!!!!!
அவருக்கு தெரியும் வாய்க்கரிசி போடவும் கூட பிள்ளைகளும், பேரக்குழந்தைகளும், தனது உயிரினும் மேலான கழக உடன்பிறப்புகள் உள்ளிட்ட யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று...
இவ்வளவு தெரிந்தும் ஏன் வீட்டுக்குள்ளேயே சுயநலத்தோடு அடங்காமல் வெளியே வந்தார்....?
ஏனெனில் அவருக்கு தெரியும் நோயைக் காட்டிலும் பசி கொடியது என்று.
தன் உயிரைக் காட்டிலும் மக்கள் உயிர் காப்பது தன் கடமை என்று 😭😭😭
நெஞ்சம் ஏற்க மறுக்கிறது உங்கள் இறப்பை.
#வீர_வணக்கம் 🙏
கொரோனா போராளி அண்ணன்
#ஜெ_அன்பழகனுக்கு.
*******************************************

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...