Monday, June 28, 2021

8 திட்டங்கள் அறிவிப்பு மத்திய அரசு தாராளம்!

 கொரோனா இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டுள்ள, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் சுகாதாரம், சுற்றுலா உள்ளிட்ட துறைகளுக்கு, 1.50 லட்சம் கோடி ரூபாய் ஊக்கச்சலுகை திட்டங்களை மத்திய அரசு அறிவித்துஉள்ளது.

8 திட்டங்கள் அறிவிப்பு , மத்திய அரசு, தாராளம்!

ஐந்து லட்சம் வெளிநாட்டு பயணியருக்கு இலவச விசா, உர மானியத்துக்கு கூடுதல் நிதி, நவம்பர் வரை ஏழைகளுக்கு இலவச உணவு தானியம் உள்ளிட்ட சலுகை திட்டங்களையும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். கடந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளால், பல்வேறு துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதையடுத்து மத்திய நிதியமைச்சகம், 4 லட்சத்து, 78 ஆயிரத்து, 95 கோடி ரூபாய்க்கு ஊக்கச்சலுகைதிட்டங்களை அறிவித்தது.




சலுகைகள்



இந்நிலையில், இந்தாண்டு மீண்டும் கொரோனா இரண்டாவது அலை காரணமாக பாதிக்கப்பட்ட துறைகளுக்கு புத்துயிரூட்ட, மேலும், 1 லட்சத்து, 50 ஆயிரத்து, 905 கோடி ரூபாய் கடன் உத்தரவாதம் உள்ளிட்ட ஊக்கச் சலுகைகளை மத்திய நிதியமைச்சகம் அறிவித்து உள்ளது. இதன் வாயிலாக மொத்தம், 6 லட்சத்து, 29 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பொருளாதார ஊக்குவிப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:ஏற்கனவே அறிவித்த பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்களுடன், மேலும், 1 லட்சத்து, 50 ஆயிரத்து, 905 கோடி ரூபாய் திட்டங்கள் நடைமுறைக்கு
வருகின்றன. ஏழைகளுக்கு இலவச உணவு பொருட்கள் வழங்கும் திட்டம், நவம்பர் வரை நீட்டிக்கப்படுகிறது. இதற்காக கூடுதலாக, 93 ஆயிரத்து, 869 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, 80 கோடி பேர் பயன் பெறுவர்.


சிகிச்சை பிரிவு



விவசாயிகள் நேரடியாக, 'டை அமோனியம் பொட்டாஷ்' மற்றும் இதர கலப்பு உரங்களை வாங்குவதற்கு கூடுதலாக, 14 ஆயிரத்து, 775 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். இதனால், மத்திய அரசின் உர மானியச் செலவு, 42 ஆயிரத்து, 275 கோடி ரூபாயாக உயரும்.கொரோனாவால் குழந்தைகள் பாதிக்கப்படும் பட்சத்தில், அதை சமாளிக்க, சுகாதார கட்டமைப்பு வசதிகளுக்கு கூடுதலாக, 23 ஆயிரத்து, 220 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். இதன் வாயிலாக, மருத்துவமனைகளில் குழந்தைகள் மற்றும் மகப்பேறு சிகிச்சை பிரிவுகள் ஏற்படுத்தப்படும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்தின் மாத சந்தாவை, இரு ஆண்டுகளுக்கு மத்திய அரசு செலுத்தும் திட்டம், 2022 மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா துறையை ஊக்குவிக்க வெளிநாட்டு சுற்றுலா பயணியர், 5 லட்சம் பேருக்கு, 'விசா' கட்டணம் தள்ளுபடி செய்யப்படும். சுற்றுலா ஏஜென்ட்கள், சுற்றுலா வழிகாட்டிகள் ஆகியோருக்கு, முறையே, 10 லட்சம் மற்றும், 1 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும், அகண்ட அலைவரிசையுடன் இணையம் வசதியை ஏற்படுத்த, 19 ஆயிரத்து, 41 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். பெரிய மின்னணு சாதன நிறுவனங்களுக்கு தயாரிப்பு அடிப்படையில் ஊக்கத் தொகை வழங்குவது, ஏற்றுமதியாளர்களுக்கான, 88 ஆயிரம் கோடி ரூபாய் காப்பீட்டு வசதி போன்ற திட்டங்களும், மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கப்பட்டு உள்ளன.

சிறிய நிறுவனங்கள் உத்தரவாதமின்றி வங்கிக் கடன் பெறுவதற்காக அமல்படுத்தப்பட்ட, அவசர கடன் உறுதி திட்டத்திற்கான வரம்பு, 3 லட்சம் கோடியில் இருந்து, 4.50 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இதுவரை ஒப்புதல் வழங்கிய, 2.73 லட்சம் கோடி ரூபாய் கடனில், 2.10 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை கடனுக்கு, 7.95 சதவீதம், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறை கடனுக்கு, 8.25 சதவீத வட்டிச் சலுகை தொடரும். வட்டி மானிய திட்டத்தில் குறுங்கடன் நிறுவனங்கள் தலா, 1.25 லட்சம் ரூபாய் வரை, அடிப்படை வட்டியை விட, 2 சதவீதம் குறைந்த வட்டியில், சிறு வியாரிகளுக்கு கடன் வழங்குகின்றன. இதில், சிறிய வியாபாரிகளின் எண்ணிக்கை வரம்பு, 25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் கடன் உறுதி திட்டத்தின் கீழ், விமானம் மற்றும் ஓட்டல் துறைகள் சேர்க்கப்பட்டன. தற்போது இத்திட்டம் சுற்றுலா துறைக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


21 லட்சம் தொழிலாளர்கள் பயன்



இந்தியாவில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க, 2020 அக்., 1ல் சுயசார்பு இந்தியா வேலைவாய்ப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. நாளையுடன் முடியவிருந்த இத்திட்டம், 2022 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், மாதம் 15 ஆயிரம் ரூபாய்க்குள் ஊதியம் பெறும் ஊழியர்கள் செலுத்த வேண்டிய தொழிலாளர் சேம நல நிதி சந்தாவை, மத்திய அரசு இரு ஆண்டுகளுக்கு செலுத்தும். அதுபோல, ஊழியர்களுக்கு, நிறுவனங்கள் சார்பில் செலுத்த வேண்டிய தொகையையும் மத்திய அரசு செலுத்தும்.

இந்த திட்டத்தில், 1,000 ஊழியர்கள் உள்ள நிறுவனங்கள் இணையலாம். அதற்கு மேற்பட்டோர் உள்ள நிறுவனங்களுக்கு ஊழியர்களுக்கான மாத சந்தாவை மட்டும் மத்திய அரசு செலுத்தும்.நிறுவனங்கள், புதிய தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவதை ஊக்குவிக்கும் இத்திட்டத்தில், கடந்த ஒன்பது மாதங்களில், 21.42 லட்சம் தொழிலாளர்கள் பயன் அடைந்துள்ளனர். 79 ஆயிரத்து, 577 நிறுவனங்களுக்கு, 902 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.


இலவச உணவு பொருட்களுக்கு நிதி



பிரதமரின் ஏழைகளுக்கான உணவு திட்டத்தில், கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு இலவச உணவு தானியம், 2020 மே - நவ., வரை வழங்கப்பட்டது. இந்தாண்டு கொரோனா இரண்டாவது அலை பரவத் துவங்கியதை அடுத்து, மீண்டும் ஏப்ரல் முதல், ஜூன் வரை இலவச உணவுப் பொருட்கள் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. தற்போது இத்திட்டம் நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் ஏழைகளுக்கு இலவச உணவு திட்டத்திற்காக, 1 லட்சத்து, 33 லட்சத்து, 972 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இது, நடப்பு நிதியாண்டிற்கு, 93 ஆயிரத்து, 869 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்புபெருகும்!



மத்திய நிதியமைச்சர் அறிவித்துள்ள ஊக்கச் சலுகை திட்டங்களால், பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் அதிகரிக்கும். வேலைவாய்ப்புகள் பெருகும். தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி உயரும்.- நரேந்திர மோடி பிரதமர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...