Monday, June 28, 2021

ஜெ., பல்கலையை முடக்க சதி 'மாஜி' அமைச்சர் குற்றச்சாட்டு.

  ஜெ., பல்கலை நுழைவு வாயிலில், நேற்று முன்னாள் அமைச்சர் சண்முகம் அளித்த பேட்டி:அ.தி.மு.க., ஆட்சியில், வேலுார் திருவள்ளுவர் பல்கலை இரண்டாக பிரிக்கப்பட்டு, விழுப்புரத்தில் ஜெ., பல்கலை துவக்கப்பட்டது. அதற்கு, துணைவேந்தரும் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

 ஜெ., பல்கலை,முடக்க சதி, மாஜி ,அமைச்சர் குற்றச்சாட்டு

இந்நிலையில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்ட மாணவர்கள், உயர்கல்வி படிக்க இனி திருவள்ளுவர் பல்கலையில் விண்ணப்பம் கொடுக்க வேண்டும் என, அப்பல்கலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.திருவள்ளுவர் பல்கலை, தன் அதிகாரத்தை மீறி, வரையறை எல்லைக்கு அப்பால் விளம்பரம் செய்துள்ள நோக்கம் என்ன; பல்கலையை யார் கொண்டு வந்தால் என்ன; மாணவர்களின் எதிர்காலம் கருதி பல்கலையை மேம்படுத்த வேண்டுமே தவிர, முடக்க நினைப்பது தவறு.உயர்கல்வித் துறை செயலர் தான், இச்செயலில் ஈடுபட்டு வருகிறார்.

இதனால், முதல்வர் மற்றும் துறை அமைச்சரிடம்நல்ல பெயர் எடுத்து, மேலும் நல்ல பதவிகளை பெறும் நோக்கத்திலும், ஜெ., பெயரில் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காகவும், இந்த பல்கலையை முடக்க, செயலர் செயல்படுகிறார்.'கடந்த ஆட்சியில் இருந்த திட்டங்கள் தொடரும்' என, முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்துள்ளார். எனவே, உயர்கல்வி படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடத்த, ஜெ., பல்கலைக்கு அனுமதி வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...