Tuesday, June 22, 2021

*கதையல்ல நிஜம், உண்மை கதை*

 சில மாதங்களுக்கு முன் ஒரு நாள் ரிஜிஸ்டர் ஆஃபிஸில் ஒரு வேலையாக காத்திருந்தேன்

அப்போது அங்கு டிப்டாப்பான ஒருவர், ஒருவரை சிடுசிடுத்து கொண்டிருந்தார் (ஏதோ கிரையம்) *இன்னொரு நாள் வைத்திருக்கலாம் இல்ல எனக்கு அவசர வேலை இருக்கு என்று திட்டி கொண்டிருந்தார்* அவரும் "இன்றைக்கு விட்டா எல்லாம் கிடைகாகமாட்டாங்க சார்" என்று சமாதானம் செய்து கொண்டிருந்தார்
எனது பக்கத்தில் உட்கார்ந்து இருந்த பெரியவர் ஒருவரும் அவர்களையே என்னைபோல ஆர்வமாக பார்த்து கொண்டிருந்தார்
இதை கவணித்த நான் அவரிடம் "என்ன இவ்ளோ அவசர படுகிறார்,? பிளைட்டா பிடிக்க போகிறார்? " என்று எதார்த்தமாக கூறினேன்
அது அவரை கொஞ்சம் எரிச்சல் அடைய வைத்து விட்டது போல!
என்னை லேசாக முறைத்து "ஆமாம் ஃபிளைட்தான் பிடிக்கனும்" என்றார்
கொஞ்சம் அதிர்ச்சி ஆச்சர்யத்தோடு "என்னய்யா சொல்றீங்க" என்றேன்!
அவரும் சற்று அமைதியாகி புன்முறுவலோடு "ஆமாம் தம்பி , எனது பேரன் கனடா போறான்!இப்போது மணி 11, இன்று இரவு சென்னை போய் அங்கிருந்து அனுப்பி வைக்கனும் , சென்னைலதான் கனடா ஃபிளைட் , இங்கிருந்து குடும்பத்தோடு காரில் சென்னை செல்கிறோம்" என்றார்.
அதாவது அந்த பெரியவர் ஒரு டாக்டர், மகனும் டாக்டர். தற்போது பேரனும் டாக்டர் படிப்புக்காக கனடா செல்கிறார்
எனக்கு பல கேள்விகள் எழுந்தன? ஏன் இங்கிருந்து 500கிமீ காரில் போகனும்? இஙங்கே இருந்து சென்னைவரை ஃபிளைட்டில் போகலாமே ? எல்லோரும் போகனுமா ? இப்போது பல கேள்விகள்!
சரி உருப்படியா ஒரு கேள்வி கேட்கலாம் என்று அவரைபார்து "ஏனுங்கய்யா ! இங்கே இத்தனை மெடிக்கல் காலேஜ் இருக்கே, அப்புறம் எதற்காக அவ்வளவு தொலையாக அனுப்பி மருத்துவம் படிங்கனும்?" இங்கேயே படிங்கலாமே ?
அப்போது அவர் ஒரு விளக்கம் கொடுத்தார் பாருங்கள்! அப்பதான் எனக்கே புரிந்தது! அட பொழுது போக்கா வாயை கொடுத்ததற்கு இவ்வளவு பெரிய புரியாத விஷயம் ஈசியா புரிந்துகொண்டோமே!
அவர் சொன்ன விஷயம் இதுதான்
"எனது பேரன் இரண்டு முறை நீட் எக்ஸாம் எழுதியும் பாஸ் பண்ண முடியவில்லை, அதனால் அங்கு போய் படித்து விட்டு வந்து இங்கே மருத்துவம் பார்ப்பான்" என்றார்
அப்போதுதான் நீட் அரக்கனை பற்றி புரிந்த மாதிரி இருந்தது
விடவில்லை கேட்டேன்!
நான்; "உங்களுக்கு பணம் இருக்கு நீங்கள் வெளிநாடு அனுப்பி படிக்க வைப்பீங்க ! ஒரு ஏழையின் டாக்டர் கனுவு பலிக்குமா ?
ஒரு ஏழை வெளிநாடு அனுப்பி படிக்க வைக்க முடியுமா?
பெரியவர்; " "அப்படி இல்லை தம்பி சுருக்கமாக சொல்கிறேன்! ஒரு திறமையான மாணவன் நீட் பாஸ் பண்ணி விடலாம்! அவருக்கு பீஸ் மட்டும் தான் வரும்! அதுவும் அரசு பள்ளிகளில் படித்து இருந்தால் அரசே மருத்துவ கல்லூரி பீசையும் கட்டி விடுகிறது! ஏழை மாணவர்கள் டாக்டர் கணவும் பலிக்கும்!
"நீட் ரத்து ஆனால் பணக்காரர்கள் லட்சம் கோடி கணக்கில் *டொனேஷன்* கொடுத்து சீட்டு வாங்கி விடுவார்கள்
" அதையும் தாண்டி ஒவ்வொரு மருத்துவ கல்லூரியிலிருந்தும் ஒவ்வொரு முக்கிய அரசியல் புள்ளிகளுக்கு சில சீட்டுகளை ஒதுக்கி விடுவர்! அதை எங்களை போன்றோர் லஞ்சம் கொடுத்து வாங்கி விடுவார்கள் " என்றார்
அப்போதுதான் எனக்கு நன்றாக புரிந்தது *நீட் அரக்கன் அல்ல* ஏழைகளுக்கு கிடைத்த *வரப்பிரசாதம்* என்று!
அப்படியே இந்த அரசியல் வியாதிகளை நினைத்து வாயடைத்துப் போனேன்.
*அந்த பெரிய டாக்டர் சொன்னது உண்மையா* ??
இன்னும் சிந்தித்து கொண்டு இருக்கிறேன்
😇😇😇😇

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...