Wednesday, June 23, 2021

தி.மு.க., டில்லி முகமாகும் சபரீசன்? முதல்வர் பயணத்தில் புது 'சிக்னல்!'

 தி.மு.க.,வில், மூத்த தலைவர்களின் முக்கியத்துவம் கேள்விக்குறியாக இருப்பதால், 'டில்லி விவகாரங்களை கையாளுவதில், தமிழக முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் பங்களிப்பு பெருமளவில் இருக்கப் போகிறது' எனக் கூறப்படுகிறது.



போட்டி



இது குறித்து டில்லியில் நேற்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:தி.மு.க., ஆட்சியில் இருந்தால், டில்லி விவகாரங்களை கவனிக்கும் பொறுப்பு, தனித்துவம் வாய்ந்த நபர்களிடம் ஒப்படைக்கப்படும்.கட்சி தலைமையின் கண் அசைவாக, டில்லியில் இவர்கள் பணி இருக்கும். நாஞ்சில் மனோகரன், டில்லி சம்பத், முரசொலி மாறன் என பலரும், இந்த பொறுப்புகளில் ஜொலித்தனர்.

தி.மு.க., டில்லி முகம், சபரீசன், முதல்வர் , புது  சிக்னல்

மாறனின் மறைவுக்கு பின், மத்திய அமைச்சர்களாக இருந்த தயாநிதி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோர், அவ்வப்போது முக்கியத்துவம் பெற்றனர். கனிமொழி ராஜ்யசபா எம்.பி., ஆன பின், அவர் தி.மு.க.,வின் டில்லி முகமாக அறியப்பட்டார். இப்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், தி.மு.க.,வின் டில்லி முகம் யார் என்ற கேள்வி, இங்குள்ள அரசியல்வட்டாரங்களில் எழுந்துள்ளது. அதற்கான விடை, கடந்த வாரம் முதல்வரின் பயணத்தில் தெரிந்தது.

பிரதமர் மோடியை சந்திக்க, முதல்வர் ஸ்டாலி னுடன் யார் செல்வது என்பதில், டி.ஆர்.பாலு, அமைச்சர் துரைமுருகன் இடையே, போட்டி இருந்ததாக தெரிகிறது.அடுத்த நாள், சோனியா மற்றும் ராகுலை சந்திக்க ஸ்டாலினும், அவரது மனைவி மட்டுமே சென்றனர். ஸ்டாலின் மூத்த தலைவர்கள் யாரையும் உடன் அழைத்து செல்லாதது ஆச்சரியம் அளித்தது.இது, டில்லியில் தி.மு.க.,வின் முகமாக, கட்சியின் மூத்த தலைவர்களை தவிர்த்து, புதிதாக ஒருவரை ஸ்டாலின் தேர்வு செய்கிறார் என்பதை உணர்த்தியது.இதற்கான விடையாக அறியப்படுபவர், முதல்வரின் மருமகன் சபரீசன். இந்த பயணத்தில் அவர் வரவில்லை எனினும், நடந்தவை அதையே
தெரிவிக்கின்றன.சபரீசனின் நிழல் என அழைக்கப்படுபவர் கார்த்திக். அண்ணா நகர் எம்.எல்.ஏ., மோகனின் மகன். தேர்தலுக்கு முன், சபரீசன் வீட்டில் 'ரெய்டு' நடந்தபோது, இவரது வீட்டிலும் நடந்தது.முதல்வரின் டில்லி பயணத்தில், கார்த்திக் உடன் இருந்ததை பலரும் கவனிக்கவில்லை. கட்சி அலுவலகத்தை முதல்வர் பார்வையிட்டபோது, முதல்வருக்கு விளக்கம் அளித்தவர் இவர் தான்.


எதிரொலிக்கும்



பா.ஜ., மற்றும் காங்., மேலிட பேச்சுகள், கூட்டணி என, பல்வேறு விவகாரங்களுக்கும், சபரீசன் தலைமையிலான குழுவே, டில்லி வந்து சென்றதாக தகவல்கள் வெளிவந்தன.இப்போது, முதல்வரின் டில்லி பயணத்தில், தி.மு.க., மூத்த தலைவர்கள் பலரும் முக்கியத்துவம் பெறாமல் தவிர்க்கப்பட்டதன் பின்னணியிலும், சபரீசன் தான் இருக்கிறார் என்பதுடன், அவரது பங்களிப்பு தான், இனி டில்லி விவகாரங்களில் எதிரொலிக்கும் என தெரிகிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...