

நடிகர் திலகத்தை வெகு இயல்பான கிராமத்து மனிதர் போல் நம்மிடையே உலவச் செய்த இயக்குநர் இமயம் பாரதி ராஜாவை எப்படிப் பாராட்டுவது.






































ஆரம்பத்தில் சிவாஜி தலை குனிந்தே
"பூங்காற்று திரும்புமா?
எம்பாட்டை விரும்புமா?"
பாடி பின் மரக் கிளையை மேலேக் கண்டு
தபேலா இசையுடன்
"பாராட்ட மடியில் வச்சுத் தாலாட்ட"
பாடி பிறகு ஆட்டுக் குட்டிகள் பாசம் கண்டு
"எனக்கொரு தாய் மடி கிடைக்குமா?"
என கண்களில் ஏக்கமும் மெல்லியப் புன்னகையுமாய் வாழ்ந்திருப்பார்.




















"ராசாவே வருத்தமா?"
எனும் போது சிவாஜி அண்ணாந்து பார்க்க குயிலின் ஒசையை அற்புதமாக புல்லாங் குழலில் வடிவமைத்திருப்பார் ஞானியார். பின் மேகங்கள் விலகும் போது பியானோ இசையுடன் மன ஆறுதலுடன் ராதா பாடும்
"ஆகாயம் சுருங்குமா?
ஏங்காதே! அதை ஓலகம் தாங்காதே!
அடுக்குமா? சூரியன் கருக்குமா?"




















"என்ன சொல்லுவேன் என்னுள்ளம்
தாங்கலே மெத்தை வாங்குனேன்
தூக்கத்தை வாங்கலை"என்று எதிர் பாடுவது யார் என்று கூடத் தெரியாமல் தன் சோகத்தினை முக பாவனைகளால் வெளிப்படுத்தி அழகுற நடித்திருப்பார்ர். பின்னர் ராதா ஆற்றங் கரையோரம் அமர்ந்து சிவாஜி மனதுக்கு ஆறுதல் பதிலைப் போல் கன்னத்தில் கை வைத்து இந்த வேதனை யாருக்குத் தான் இல்லை உன்னை மீறவே ஊருக்குள் ஆள் இல்லை என பாட பிறகு சிவாஜி அவர்கள்
"ஏதோ என் பாட்டுக்குப் பாடி
சொல்லாத சோகத்தை சொன்னேனடி"
கடைசியில் சொன்னேன(டி) அந்த ஒரு சொல்லினை ம.வாசுதேவன் அழகாக இழுத்துப் பாடியிருப்பார்
பாருங்கள் ஆஹா.
























"சொக ராகம் சோகம் தானே"
ஜானகிமா சுக ராகம் என்பதை ஏதோ வட்டார வழக்கு பாஷை போல் சொக ராகம் என பாடியிருப்பார். அடுத்து சோகம் தானே... முடியாமல் ஜானகிமா இழுக்கும் வேளை குயிலின் ஓசையை புல்லாங்குழலில் வழங்கி நம்மைத் தேற்றியிருப்பார்.
பின் சிவாஜி அவர்கள் பாடும்
"யாரது போறது?"
என்றவுடன் ராதா பாடும்
"குயில் பாடலாம்
தன் முகம் காட்டுமா?"





"உள்ள அழுகிறேன்! வெளிய
சிரிக்கிறேன்! நல்ல வேஷந்தான்!
வெளுத்து வாங்குறேன்!"
எனப் பாட ராதா பதிலுக்கு
"உங்க வேஷந்தான்
கொஞ்சம் மாறனும்
இந்தச் சாமிக்கு
மகுடம் ஏறனும்"


















"மானே என் நெஞ்சுக்குப்
பால் வார்த்த தேனே!
பொன்னே! என் பார்வைக்கு
வா! வா! பெண்ணே!
என ஏக்கத்தில் கரைந்து மரத்தின் ஓரத்திவ் பாடிட ராதா ஜானகிமா குரலில்
"எசப் பாட்டு படிச்சேன் நானே"
என பரிசல் ஓட்டிக் கொண்டே குயிலின் ஒசையில் புல்லாங்குழல் இசையுடன் பாட
பின் சிவாஜி அவர்கள்
"பூங்குயில் யாரது?"
என பாடி மரத்தினைத் தாண்டி எட்டிப் பார்க்க
ராதா பாடும்
"கொஞ்சம் பாருங்க"
பெண் குயில் நானுங்க"






















"நீதானா அந்தக் குயில்?"(குக்குக்.... கூ..)
யார் வீட்டு சொந்தக்குயில்?"(குக்குக்....கூ)
(குககுக்....கூ) குயிலின் ஓசையை புல்லாங் குழலில் #இசைஞானி நன்றாக வழங்கியிருப்பார்.பிறகு சிவாஜி அவர்கள் மெல்லிய புன்னகைக்யுடன் புருவம் உயர்த்தி ஒரு பார்வை பார்ப்பார் பாருங்கள் ஆஹா எந்த வயதிலும் அசத்தும் இப்பபடி ஒரு மகா கலைஞனை இனி நாம் காண முடியுமா? வாய்ப்பே இல்லை.







பறந்ததே உலகமே மறந்ததே"









ஆத்தாடி மனசுக்குள காத்தாடி
பறந்ததா? ஒலகமே மறந்ததா?




















வெகு இயல்பாக சிவாஜியின் நடிப்பும், உறுத்தாத ஒப்பனையும் இருக்கும்.திரைக் கதையில் இவர்கள் உறவில் சிறிதளவும் காமம் கலக்காமல் இயக்கிய பாரதிராஜா போற்றுதலுக்குரியவர். ஏனெனில் சிறிய் இச்சையும் கள்ளக் காதலாக மாறிட வாய்ப்புண்டு. அதை நேர்த்தியாக கையாண்ட விதம் அருமை. ராஜாவுக்கு இப்படம் தனிப்பட்ட முறையில் பிடிக்கவில்லை என்றாலும் தனது உயிரை உருக்கி உன்னத இசையை வழங்கியுள்ளார்.
இப்பாடல் விமர்சனம் மறைந்த நடிகர் திலகம் சிவாஜிக்கும், பாடகர் மலேசியா வாசு தேவன் அவர்களது ஆன்மாவுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன்.மிகவும் பொறுமைமாக இந்தப் பதிவினைப் படித்த என் நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். எனக்குத் தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் நண்பர்கள் அனைவரையும் தலை வணங்குகிறேன்.வாழ்க வளமுடன். #இசைஞானி #இளையராஜாவின் இசை அருளால் அனைவரது ஆயுளும் நீடிக்க கடவுளைப் பிரார்த்திக்கிறேன்.. மனமார்ந்த நன்றிகள்.





No comments:
Post a Comment