Wednesday, June 30, 2021

பெருமதிப்பிற்குரிய அண்ணன் அவர்கள் என்கிறார் மாசு தன் மகன் ஒத்த வயதுடைய உதயநிதி யை.

 'உதயநிதி சட்டசபைக்கு வந்தார்' என்று தினத்தந்தி நேற்று முன்தினம் புகைப்படத்துடன் ஒரு செய்தி போட்டிருந்தது, சட்டசபையில் இருந்து 'வெளியே வந்தார்' என்று நேற்று மறுபடியும் அதே போல் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தது ! நாம் கேட்க நினைப்பது, ஒரு எம்எல்ஏ சட்டசபைக்கு வருவதெல்லாம் தினத்தந்திக்கு செய்தியாக தெரிகிறதா என்பது தான் !! சட்டமன்றத்திற்கு செல்வதற்கு தானே மக்கள் அவரை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்...?

உதயநிதி, சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து சிறப்பாகவும், ஆணித்தரமாகவும் ஒருவேளை பேசியிருந்தால், அப்பொழுது அது குறித்த செய்தியை தினத்தந்தி பிரசுரித்திருந்தால் பாராட்டியிருக்கலாம்...
முதலமைச்சரின் மகன் என்பதாலேயே ஒருவர் போற்றுதலுக்கும், புகழப்படுவதற்கும் உரியவராக இருப்பாரேயானால், இங்கு இருப்பது மக்களாட்சியும் அல்ல... சட்ட ஆட்சியும் அல்ல... !
நன்றாக கவனித்துப் பாருங்கள், சட்டமன்றம் நடைபெறும் அரங்கத்தில், முதல்வர் ஸ்டாலினுக்கு நேர் பின்புறமாக உதயநிதிக்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது... எப்பொழுதெல்லாம் ஸ்டாலின் கேமரா வெளிச்சத்திற்கு வருகிறாரோ, அப்பொழுதெல்லாம் உதயநிதியும் frame க்குள் வருவார்... ஊடக பார்வையிலும் மக்கள் பார்வையிலும் அவர் தெரிந்து கொண்டே இருப்பார் ! அதெல்லாம் திட்டமிட்டே செய்யப்படும் personality projection !!
அலப்பறைகள் அதோடு முடிகிறதா என்றால் இல்லை... சட்டமன்றத்தில் பேசும் அனைத்து அமைச்சர்களும், வயது, அனுபவம் வித்தியாசம் இன்றி, எல்எல்ஏ வாக மட்டுமே இருக்கும் உதயநிதியை தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ரேஞ்சுக்கு உயர்த்தி, புகழ்ந்து பேசிவிட்டு தான் தங்களது பேச்சையே துவங்குகிறார்கள்... அந்த சமயத்தில் உதயநிதியின் முகபாவனையை பார்க்கனுமே... அத்துனை புகழ்ச்சிக்கும் உரியவன் நான் என்பது போல முகத்தை வைத்துக் கொள்வது அபத்தத்தின் உச்சம் !
திமுக போன்ற ஒரு இயக்கத்திற்கான தலைமை என்பது சுயம்புவாக உருவாக வேண்டும், அந்த தலைமை தொண்டர்கள் மத்தியில் இருந்தால் தான் நல்லது... ஆனால், அப்படியில்லாமல், அப்பட்டமாக தலைமை திணிக்கப்படும் போது தான் இது போன்ற விமர்சனங்கள் எழுகிகிறது...
கேள்வி கேட்க வேண்டிய ஊடகங்கள் ஊமையாகி விட்டன, அரசியல் விமர்சகர்கள் விலை போய் விட்டார்கள், தொண்டர்கள் சுயமரியாதையை இழந்து விட்டார்கள்... ஆகவே உதயநிதி மட்டுமல்ல, நாளை இன்பநிதியும் வரக்கூடும்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...