Wednesday, June 30, 2021

தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக கடிதம்.

 2014-ம் ஆண்டு ஆகஸ்டு 29-ந்தேதி அன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா கட்சியின் பொதுச்செயலாளராக 7-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்ற நிர்வாகிகளும் முறைப்படி தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக கடிதம்
அதிமுக














அரசியல் சட்டவிதியின் படி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்சிகளுக்கு உள்கட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் சட்டதிட்டப்படி 2014-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் 2015 ஏப்ரல் வரை நடத்தப்பட்டது. இதில் 2014-ம் ஆண்டு ஆகஸ்டு 29-ந்தேதி அன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா கட்சியின் பொதுச்செயலாளராக 7-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்ற நிர்வாகிகளும் முறைப்படி தேர்வு செய்யப்பட்டனர்.

ஜெயலலிதா

அதன்பிறகு பல்வேறு காரணங்களால் அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் நடைபெறவில்லை. கடைசியாக 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பொதுக்குழு கூடியது. இதில் கட்சியின் பொதுச்செயலாளருக்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கு ஏற்ப கட்சியின் விதிகள் திருத்தப்பட்டன. இதற்கு அ.தி.மு.க. பொதுக்குழு அங்கீகாரம் வழங்கியது.

தொடர்ந்து விரைவில் மாநில, மாவட்ட, கிராம அளவிலான கட்சி நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதத்துக்குள் உள்கட்சி தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டது. பல்வேறு காரணங்களால் அது நடைபெறவில்லை.

எனவே ஜூலை மாதம் மத்தியில் அ.தி.மு.க. உள்கட்சி தேர்தலை நடத்தும் படி தேர்தல் கமி‌ஷன் கேட்டுக்கொண்டது. இதையடுத்து உள்கட்சி தேர்தலை நடத்த கூடுதல் அவகாசம் கேட்டு தேர்தல் கமி‌ஷனுக்கு அ.தி.மு.க. சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில் அதற்கான காரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

கொரோனா பரவல் காரணமாக அ.தி.மு.க. உள்கட்சி தேர்தலை தற்போது நடத்த இயலாதநிலை உள்ளது. எனவே கட்சி தேர்தலை நடத்த 6 மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 10 நாட்களுக்கு முன்பாகவே இந்த கடிதம் தேர்தல் ஆணையத்துக்கு முறைப்படி அனுப்பப்பட்டு விட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் ஜனவரி 9-ந்தேதி நடந்தது. இதை தொடர்ந்து சட்டசபை தேர்தல், கொரோனா தொற்று பரவல் காரணமாக கட்சி தேர்தலை நடத்த முடியவில்லை. தேர்தல் தோல்வியால் கட்சி கட்டமைப்பை சீரமைக்க வேண்டியுள்ளது. விரைவில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல், நகராட்சி தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே கட்சி தலைமை உள்கட்சி தேர்தலை நடத்த கால அவகாசம் கேட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலை சந்திக்கும் நிலையில், சசிகலா அரசியலுக்கு திரும்பும் ஏற்பாடுகளில் இறங்கியுள்ளார்.

எனவே கட்சியின் கோரிக்கையை தேர்தல் கமி‌ஷன் ஏற்றுக்கொண்டு 6 மாத அவகாசம் வழங்கினாலும், கட்சி தேர்தலை நடத்தி அ.தி.மு.க.வின் கட்டுக்கோப்பை நிலை நாட்ட வேண்டும். எனவே விரைவில் பொதுக்குழு கூட வாய்ப்புள்ளது என்று அ.தி.மு.க. நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...