Tuesday, June 29, 2021

தமிழக சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி.,யாக சைலேந்திரபாபு நியமனம்.

 தமிழக காவல் துறையின், 30வது சட்டம் -ஒழுங்கு டி.ஜி.பி.,யாக சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டு உள்ளார்.

தற்போது, சட்டம் - -ஒழுங்கு டி.ஜி.பி.,யாக பணிபுரியும் திரிபாதி, இன்று ஓய்வு பெறுகிறார். அதனால், புதிய டி.ஜி.பி.,யை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்காக, மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் பட்டியல், மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.அதில், சைலேந்திரபாபு, கரன் சின்ஹா, கந்தசாமி உள்ளிட்டோரின் பெயர்கள் முன்னணியில் இருந்தன. இரு தினங்களுக்கு முன், டில்லியில் தமிழகத்தின் புதிய டி.ஜி.பி.,யை தேர்வு செய்வதற்கான கூட்டம் நடந்தது.

இதில், மத்திய உள்துறை அதிகாரிகள், மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள், தமிழக அரசின் தலைமை செயலர், உள்துறை செயலர், தற்போதைய டி.ஜி.பி., ஆகியோர் பங்கேற்றனர். அதில் மூன்று பேர் அடங்கிய பட்டியல் இறுதி செய்யப்பட்டது.இந்நிலையில், தமிழக காவல் துறையின், 30வது டி.ஜி.பி.,யாக சைலேந்திரபாபு நேற்று நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை, தலைமை செயலர் இறையன்பு பிறப்பித்து உள்ளார்.

சைலேந்திரபாபு, கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில், 1962 ஜூன் 5ல் பிறந்தார்.வேதியியல், ஆங்கிலம் மற்றும் வணிக மேலாண்மையில் முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர்.இளைஞர்களின், 'ரோல் மாடல்' என்று அழைக்கப்படும் சைலேந்திரபாபு, 1987ல், தமிழக பிரிவு ஐ.பி.எஸ்., அதிகாரியாக தேர்ச்சி பெற்றார். சேலம், தர்மபுரி மாவட்ட ஏ.எஸ்.பி.,யாக பணியை துவங்கிய இவர், திண்டுக்கல் மற்றும் அப்போது இருந்த செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட எஸ்.பி.,யாக பணிபுரிந்துள்ளார்.

சென்னையில் அடையாறு துணை கமிஷனர், விழுப்புரம், டி.ஐ.ஜி., மற்றும் சென்னையில் தெற்கு இணை கமிஷனர், கோவை கமிஷனர், வடக்கு மண்டல ஐ.ஜி., மாநில சட்டம்- - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., என, பல முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார்.

அனுபவமிக்க ஐ.பி.எஸ்., அதிகாரியான இவர், தீயணைப்பு துறை மற்றும் சிறைத்துறை இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார். தற்போது ரயில்வே டி.ஜி.பி.,யாக இருக்கிறார்.இவர், கோவை கமிஷனராக இருந்த போது தான், முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையில் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டது. பணிகளுடன், உடற்பயிற்சி முக்கியத்துவம் குறித்து, 'வீடியோ' வாயிலாக, இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

தமிழகத்தின் புதிய டி.ஜி.பியாக Dr.#சைலேந்திரபாபு ஐபிஎஸ் நியமனம்...!

வாழ்த்துக்கள்
சார்...! 💐💐🎊
May be an image of 1 person, beard and military uniform

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...