Wednesday, June 30, 2021

'மனிதாபிமானத்துடன் நடக்க போலீசாருக்கு பயிற்சி!'

 ''காவல் துறை சார்ந்த, 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தின் கீழ் தரப்படும் மனுக்கள் மீது, 30 நாட்களில் தீர்வு காணப்பட்டு அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும். பொதுமக்களிடம் மனிதாபிமானத்துடன் நடக்க, போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்படும்,'' என, புதிய டி.ஜி.பி., சைலேந்திரபாபு கூறினார்.

 'மனிதாபிமானம், போலீசார், பயிற்சி, சைலேந்திரபாபு

தமிழக காவல் துறையின், 30வது சட்டம் -- ஒழுங்கு டி.ஜி.பி.,யாக, சைலேந்திரபாபு நியமிக்கப் பட்டார். இவர், சென்னை காமராஜர் சாலையில் உள்ள டி.ஜி.பி., அலுவலகத்தில், பொறுப்பேற்றார். ஓய்வு பெற்ற டி.ஜி.பி., திரிபாதி மலர் கொத்து வழங்கி, வாழ்த்து தெரிவித்து பொறுப்புகளை ஒப்படைத்தார்.

திரிபாதி மற்றும் அவரது மனைவிக்கு, சைலேந்திரபாபு மலர் கொத்து வழங்கினார். டி.ஜி.பி., பொறுப்பேற்பு நிகழ்ச்சிக்கு பின், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காரில், திரிபாதி மற்றும் அவரது மனைவியை அமரச் செய்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சிறிது துாரம், தேர் போல இழுத்து சென்று வழியனுப்பினர்.

பின் சைலேந்திரபாபு அளித்த பேட்டி:தமிழக காவல் துறையின், தலைமை பொறுப்பில் பணியாற்றுவது ஓர் அரிய சந்தர்ப்பம். இந்த அரிய வாய்ப்பை தந்துள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி.சட்டம் -- ஒழுங்கு பராமரிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

குறிப்பாக, 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டம் வாயிலாக தரப்படும் மனுக்கள் மீது, 30 நாட்களுக்குள் விசாரித்து, முடிவு காணப்பட்டு அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும். பொது மக்களிடம், போலீசார் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். மனித உரிமைகளை மதித்து நடக்க வேண்டும். போலீசாருக்கு அதற்கான பயிற்சி அளிக்கப்படும்.போலீசாரின் குறைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இத்தகைய இலக்குகளை அடைய, பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தற்போது தான் பொறுப்பேற்று உள்ளேன்; இனி எங்கள் நடவடிக்கைகள் பேசும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...