எவ்வளவு தான் பரிகாரங்களை தொடர்ந்து செய்து கொண்டு வந்தாலும், இந்த கண் திருஷ்டி மட்டும் மீண்டும் மீண்டும் நம்மை பின் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கும். ஆகவே மாதத்தில் ஒரு நாளோ அல்லது வாரத்தில் ஒரு நாளோ இந்த கண் திருஷ்டியை கழிக்க கூடிய பரிகாரத்தை செய்து கொண்டே இருங்கள். வீட்டில் இருப்பவர்களுடைய முன்னேற்றம் தடைபட குடும்பத்தில் இருப்பவர்களுடைய ஆரோக்கியம் கெட்டுப் போக, குடும்பத்தில் கஷ்டம் வருவதற்கு, இந்த கண்திருஷ்டி ஒரு பெரிய காரணம். ஏவல் பில்லி சூனியத்தை விட எல்லாம் பொல்லாதது இந்த கண் திருஷ்டி. கொஞ்சம் கொஞ்சமாக ஒரு குடும்பத்தின் சந்தோசத்தை அழித்து சீர்குலைத்து விடும். ஆக கண் திருஷ்டியில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். நம்மை சுற்றி அக்கம் பக்கம் இருப்பவர்களுடைய கண் திருஷ்டி நம் மீது விழுவது ஒரு ரகம். இதோடு மட்டுமல்லாமல் நம் வீட்டிற்கு வந்து செல்பவர்களுடைய வயிற்றெரிச்சல் பொறாமை குணம் இவை எல்லாம் சேர்ந்து நெகடிவ் எனர்ஜியாக மாறி நம்மை தாக்கி நமக்கு கஷ்டத்தை தரும். இதை தடுப்பதற்கு நம்முடைய வீட்டில் என்ன பரிகாரம் செய்யலாம். தொடர்ந்து ஐந்து நாட்கள் ஒரு டம்ளர் தண்ணீரை வீட்டு வரவேற்பறையில் இப்படி வைத்து விடுங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் கண் திருஷ்டியையும் அடுத்தவர்களுடைய வயிற்றெரிச்சல் பொறாமை எண்ணத்தையும் அப்படியே இந்த தண்ணீர் ஈர்த்து உறுஞ்சி கொள்ளும். ஒரு கண்ணாடி டம்ளர் எடுத்துக் கொள்ளுங்கள். அது நிரம்ப நல்ல தண்ணீரை ஊற்றி விடுங்கள். அதில் வரமிளகாயிலிருந்து எடுத்த விதை 7, பச்சை மிளகாய்க்கு உள்ளே இருக்கும் விதை 7, சமையலுக்குப் பயன்படுத்தும் மிளகு 7, கல் உப்பு 2 ஸ்பூன், மஞ்சள் தூள் 2 சிட்டிகை, இந்த பொருட்களை எல்லாம் போட்டு கண்ணாடி தம்ளரை அப்படியே வரவேற்பறையில் யார் கண்ணுக்கும் தெரியாமல் கூட வைத்துக் கொள்ளலாம். கீழே ஊற்றாமல் இருக்கும்படி பத்திரமாக ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்ளுங்கள். காலையில் இந்த தண்ணீரை உங்களுடைய வீட்டு வரவேற்புரையில் தயார் செய்து வைத்தால், மறுநாள் காலை பழைய தண்ணீரை எடுத்து கால் படாத இடத்தில் ஊற்றிவிட்டு மீண்டும் புதிய தண்ணீரை நிரப்பி மீண்டும் மேல் சொன்ன பொருட்களை அதில் போட்டு வைக்க வேண்டும். தொடர்ந்து ஐந்து நாட்கள் இந்த தண்ணீர் உங்களுடைய வீட்டில் இருக்கும்போது, உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை எனர்ஜியை அப்படியே உறிஞ்சிக் கொள்ளும். வீடு கண் திருஷ்டியில் இருந்து விலகி சுத்தமாக மாறிவிடும். (ஐந்து நாட்களும் தினமும் தண்ணீரை மாற்ற மறந்து விடாதீர்கள்.) ஐந்து நாட்கள் இந்த பரிகாரத்தை செய்த பின்பு தினமும் இந்த டம்ளர் தண்ணீரை வைக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. இரண்டு வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது மாதத்திற்கு ஒரு நாளோ, ஒரே ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை மட்டும் இந்த பரிகாரத்தை செய்தால் போதும். வீடு மீண்டும் மீண்டும் சுத்தமாகி கொண்டே இருக்கும். உங்கள் வீட்டிற்கு எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள் பொறாமை என்னும் கொண்டவர்கள் யார் வந்து சென்றாலும் சரி அந்த கண் திருஷ்டியால் எந்த ஒரு பிரச்சனையும், குடும்பத்திற்கு வராது. இது ஒரு சுலபமான பரிகாரம்தான். எல்லோராலும் செய்ய முடியும். நிச்சயமாக உங்கள் வீட்டில் வரக்கூடிய குழப்பங்களுக்கு தெளிவு கிடைக்கும். மன நிம்மதி அடைவீர்கள். குடும்பத்தில் இருக்கும் சண்டை சச்சரவு குறையும். கண் திருஷ்டியில் இருந்து கவனமாக குடும்பத்தை பாதுகாத்துக் கொள்ள இது ஒரு சக்தி வாய்ந்த சுலபமான பரிகாரம். நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Thursday, June 30, 2022
சிந்தியுங்கள் தொழிலாளிகளே.
இனி திருந்துமா இந்தியா?
"இந்தத் தகவல் உண்மைதானா" என்று கேட்டார் பிரகாஷ்ராஜ்.
அந்த செய்தி ஏதோ ஒரு இணைய தளத்தில் வெளி வந்திருந்தது.
சரோஜாதேவி..............
1938 ஜனவரி 7ஆம் தேதி பிறந்தவர் சரோஜாதேவி 2022 ஜனவரி ஆறாம் தேதியுடன் 84ஆண்டுகள் ஆகிறது
சுயேச்சை சின்னத்தில் அ.தி.மு.க.,வினர் போட்டியிடும் நிலை!
உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர்கள் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள 510 உள்ளாட்சி பதவிகளுக்கு வரும் 9ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் நகர்ப்புற உள்ளாட்சிகளில் 12 பதவிகளுக்கும் ஊரக உள்ளாட்சியில் 22 பதவிகளுக்கும் கட்சி அடிப்படையில் தேர்தல் நடக்க உள்ளது. இதில் போட்டியிட அ.தி.மு.க., சார்பில் அக்கட்சியினர் மனு தாக்கல் செய்தனர். அவர்கள் அ.தி.மு.க., வேட்பாளர்கள் என்பதற்கு அடையாளமாக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர், 'படிவம் ஏ, பி' ஆகியவற்றில் கையெழுத்திட்டு கொடுக்க வேண்டும்.
அவ்வாறு கொடுக்கப்பட்டால் அவர்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படும். தற்போது கட்சி தலைமைப் பதவி தொடர்பாக, பழனிசாமி - பன்னீர்செல்வம் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் கட்சி வேட்பாளர்களுக்கு உரிய படிவம் வழங்கப்படவில்லை. அதனால் மனு தாக்கல் செய்த அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு, சுயேச்சை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில், அ.தி.மு.க., வேட்பாளர்கள் தங்கள் மனுவை வாபஸ் பெற்றனர்.
Wednesday, June 29, 2022
கட்சி பாகுபாடின்றி செயல்படுவது தான் #நாட்டு_பற்று..!
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
Numbering of vehicle in India is done at Regional/Sub Regional Transport Offices located in various states. Each vehicle number has presc...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...