Monday, June 27, 2022

திருமாவை ஓரமாக நிற்க வைத்து பெருமையாய் வேட்புமனு தாக்கல் செய்த எதிர்க்கட்சிகள்.

 எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா வேட்புமனு தாக்கலின் போது, கூட்டணி கட்சி தலைவர் என்ற முறையில் திருமாவளவன் அமர ஒரு நாற்காலி தராமல் ஓரமாக நிற்க வைத்த சம்பவம் நடந்தது.


நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த்சின்ஹா இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் காங். எம்..பி. ராகுல், மல்லிகார்ஜூன கார்கே, தேசியவாத காங்., தலைவர் சரத்பவார், தி.மு.க,வைச் சேர்ந்த ஆ.ராசா, உபி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் சென்றனர்.


latest tamil news



அப்போது காங்.,தி.மு.க., கூட்டணி கட்சி தலைவரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான திருமாவளவனும் உடன் சென்றார். வேட்புமனு தாக்கலின் போது திருமாவளவன் அமர நாற்காலி இல்லை. இதனால் அவர் பின்னால் ஓரமாக நின்று கொண்டிருந்தார்.
ஆனால் புகைபடத்தில் திருமா நிற்கும் வலது புறம் பெண் அமர்ந்திருப்பதை பார்க்கும் போது அங்கு நாற்காலி வழங்கப்பட்டு திருமா அமர்ந்திருந்தார் அதன் புகைப்படங்களும் வெளிவந்தன., பின்னர் வேட்புமனு தாக்கலை பார்ப்பதற்காக அல்லது ஏதோ காரணங்களாக அவர் எழுந்து நின்று கொண்டிருந்ததாக தெரிகிறது.

இருப்பினும்,காங்கிரஸ் திமுக கூட்டணிக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை வெற்றிபெற வைப்பதில் முழு மூச்சாக இறங்கியிருக்கும் திருமாவளவனுக்கு ஒரு பிளாஸ்டிக் சேர் கூட தரப்படாமல் ஒரு ஓரமாக நிற்க வைத்து பெருமையாய் வேட்புமனு தாக்கல் செய்தனர் எதிர்க்கட்சி தலைவர்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...