Tuesday, June 28, 2022

அரசியல்வாதிகளுக்கு கட்டுப்பாடு கிடையாதா?

 கொரோனா தொற்று பரவல், பல மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில், குறிப்பாக நகர்ப்புறங்களில் தொற்று பரவல் அதிகமாக உள்ளது.

எனவே, பொது இடங்களில் முககவசம் அணியாமல் இருப்போருக்கும், கொரோனா வழிமுறைகளை முறையாக கடைப்பிடிக்காதோருக்கும், தற்போது நடைமுறையில் உள்ள, 'பொது சுகாதார சட்டம் -- 1934'ன் படி அபராதம் விதிக்கப்படும் என்று, தமிழக அரசு அறிவித்து இருக்கிறது.
இந்த அறிவிப்பை பார்க்கும் போது, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டியதும், வாய் மற்றும் மூக்கை மூடியபடி முகக் கவசம் அணிய வேண்டியதும், பொதுமக்கள் மட்டும் தானா...அதிகாரிகளுக்கோ, அரசியல்வாதிகளுக்கோ கிடையாதா என்றே கேட்கத் தோன்றுகிறது. தமிழகத்தில் தொற்று பரவல் அதிகமாக உள்ள நிலையில், ஆளும் அரசியல் கட்சியானது, தாங்கள் நடத்தும் அரசு விழாக்களையோ, பொதுக் கூட்டங்களையோ தவிர்த்து இருக்கிறதா? அவை நடந்தபடியே தான் இருக்கின்றன; அங்கெல்லாம் ஏராளமானோர் கூடவும் செய்கின்றனர்.
சமீபத்தில், அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம், சென்னை வானகரத்தில் நடந்தது. அதில் பங்கேற்றோரில் எத்தனை பேர் முக கவசம் அணிந்திருந்தனர்; சமூக இடைவெளியை பின்பற்றினர். இத்தனைக்கும் அந்தப் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றோரில், ௯௦ சதவீதம் பேர் வெளி மாவட்டங்களை சேர்ந்தோர்.
இதுபோல, ஆளுங் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் நடந்தும் நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களில் பங்கேற்போர் யாரும் முக கவசம் அணிவதில்லை; சமூக இடைவெளியையும் பின்பற்றுவதில்லை. இவர்களால் தொற்று பரவாதா... பொதுமக்கள்
வாயிலாக மட்டும் தான் பரவுமா?வேடிக்கையாக உள்ளதே!அரசியல் கட்சிகள் மற்றும் அதிகாரிகளின் செயல்பாடுகளைப் பார்க்கும் போது, அவர்களுக்கு கொரோனா தடுப்பு விதிகள் பொருந்தாது போலவும், பொதுமக்கள் அந்த விதிகளை மீறினால், அபராதம் விதித்து, 'கல்லா' கட்டுவோம் என்பது போலவும் உள்ளது.
'ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே! காசு காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே!' என்ற ஒரு பாடல் உண்டு. அந்த பாடலுக்கு சிறந்த உதாரணமாக, தமிழக அரசு நடந்து கொண்டிருக்கிறது என்றால் மிகையில்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...