60 - 70 களில் பிறந்தவர்களால் தூர்தர்ஷனை மறக்கவே முடியாது. டில்லியில் 1959 லேயே பிறந்திருந்தாலும், நம்ப சென்னைக்கு வந்தது "75" களில் தான்.
கதவு போட்ட சாலிடர் டிவி... பார்க்கும் போது அத்தனை ஆச்சரியமும் சந்தோஷமும் கலந்திருக்கும்.
வாரம் ஒரு நாள் மட்டுமே - ஞாயிறு சினிமா., புதன்கிழமை 'சித்ரஹார்'., வெள்ளிகிழமையில் 'சித்ரமாலா' என்று எதுவுமே மறக்கமுடியாது.
இந்தியத் தொலைக்காட்சிகளுக்கு அடிப்படை வகுத்துக் கொடுத்த நிறுவனம் என்கிற வகையில் தூர்தர்ஷனின் பங்களிப்பை என்றுமே, யாராலுமே புறக்கணிக்க முடியாது. பெருந்தலைவர்கள் யாரேனும் இறந்துவிட்டால் ஒலிக்கும் இசையைப் போலவே இன்றைக்கும் ஒலிக்கும் அதன் சிக்னேச்சர் இசையையும் மறக்க முடியாது.
சேட்டிலைட் சேனல்களின் வருகையால், தூர்தர்சனின் புகழ் படிப்படியாக மங்கத் தொடங்கி, பார்வையாளர்களும் குறைவு.... தான் என்றாலும் தனது வழக்கமான பாணியில், ஒளிபரப்பை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
No comments:
Post a Comment