Friday, June 24, 2022

அரசியல்வாதிகளுக்கு வருமா, 'செக்!

 ராணுவத்திற்கு ஒவ்வொரு ஆண்டும், ௫௦ முதல், ௬௦ ஆயிரம் வீரர்களைத் தேர்வு செய்ய, 'அக்னிபத்' என்ற திட்டத்தை, மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுவோர், ராணுவத்தின் முப்படைகளில், நான்கு ஆண்டுகள் மட்டுமே பணிபுரிவர்; அதன்பின் விடுவிக்கப்படுவர். இதையடுத்து, அவர்கள் மற்ற வேலைகளில் ஈடுபடலாம். இதேபோல, 'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களும், அமைச்சர்களும் குறிப்பிட்ட காலம் தான் பதவி வகிக்க வேண்டும்' என, கால வரையறை நிர்ணயிக்க வேண்டும்.



பிரதமர் மற்றும் மாநில முதல்வர்கள், இரண்டு முறைக்கு மேல் பதவி வகிப்பதற்கும் தடை விதிக்க வேண்டும். அமெரிக்காவில் அதிபர் பதவியை, ஒருவர் இருமுறை மட்டுமே வகிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இளைஞர்கள் அரசு வேலையில் சேர வேண்டும் எனில், அதற்கான பட்டப்படிப்பு உள்ளிட்ட தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.அத்துடன், குறிப்பிட்ட வயதை தாண்டி விட்டால், அவர்கள் அரசுப் பணியில் சேரும் தகுதியை இழந்து விடுவர்.



ஆனால், அரசியல்வாதிகளுக்கு அப்படியல்ல... எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்த லில் நிற்பர்; எத்தனை தடவை வேண்டுமானாலும், பிரதமராகவும், முதல்வராகவும், அமைச்சர்களாகவும் பதவி வகிக்கலாம். 90 வயதிலும், மாநில முதல்வராகலாம். இவர்களுக்கு வயது வரம்போ, கல்வித் தகுதியோ தேவையில்லை.எனவே, ஒருவர் அரசுத் துறையிலும், தனியார் துறையிலும் பணியாற்ற, கல்வித் தகுதி, வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருப்பது போல, அரசியல்வாதிகளுக்கும் நிர்ணயிக்க வேண்டும். காலத்திற்கு ஏற்ப ஒவ்வொரு விஷயத்திலும் மாற்றங்கள் அறிமுகமாகின்றன.



அதேபோல, அரசியல்வாதிகள் விஷயத்திலும், அவர்களின் கல்வித் தகுதி, ஓய்வூதியம் மற்றும் ஓய்வு வயது போன்றவற்றிலும் மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.அப்போது தான், இளம் தலைமுறையினருக்கு அதிக வாய்ப்புகள் உருவாகும். அரசு நிர்வாகத்திலும், பழைய நடைமுறைகள் மாறி, புதுமைகள் அறிமுகமாகும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...