Saturday, June 25, 2022

ஆறுமுகம் என்றால் என்ன?

 முருகப்பெருமானை ஆறுமுகன் என்கிறோம்.

ஆறுமுகன் (அ) ஷண்முகன்
சிவபெருமானின் கண்களிலிருந்து வெளிவந்த ஆறு பொறிகள் ஆறுமுகங்களாக மாறியதால் ‘ஆறுமுகன்’ எனப் பெயர் பெற்றார்.
முதல் ஐந்து முகங்கள் பஞ்ச பூதங்களைக் குறிக்கின்றன.
ஆறாவது முகம் உயிருள்ள அனைத்து ஜீவன்களுக்குள் இருக்கும் ஆன்மாவைக் குறிக்கிறது.
முருகன் அம்மையும் அப்பனுமாக இருப்பவன்.
ஆகையால், அம்மையின் ஒரு முகமும் அப்பனின் ஐந்து முகமும் சேர்ந்து ஆறுமுகமானான் என்று ஒரு விளக்கம் உள்ளது.
ஏறு மயிலேறி விளையாடும் முகம் ஒன்று, ஈசனுடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்று, கோரும் அடியார்கள் வினை தீர்த்த முகம் ஒன்று, குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்று, மாறுபட சூரரை வதைத்த முகம் ஒன்று, மற்றும் வள்ளியை மணம் புரிய வந்த முகம் ஒன்று என்று முருகப் பெருமானே மொழிந்ததாக ஒரு விளக்கம் உள்ளது.
பக்தர்களின் ஆசைகளைப் பூர்த்திசெய்ய ஒரு முகம்,
பக்தர்களின் அறியாமையை ஒழித்து அறிவை நிலைநிறுத்த ஒரு முகம், பக்தர்களின் ஆழ்மனதில் புதைந்துள்ள எண்ணங்களை வெளிக்கொண்டுவர ஒரு முகம், யாக யக்யங்களைச் செய்யத் துணை புரிய ஒரு முகம், நல்லவர்களைக் காத்துத் தீயவர்களைத் தண்டிக்க ஒரு முகம், மற்றும் பக்தர்களிடம் அன்பு என்ற சுடரை ஏற்றி இன்பத்தை நிலைநிறுத்த ஒரு முகம் என ஆறுமுகங்களுக்கும் தனித்தனியான முக்கியத்துவம் உள்ளன.
ஆறுமுகம் என்று பெயருள்ளவர்கள் தங்களைக் குறித்துப் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.
ஏனெனில், இந்தப் பெயருக்கு தெய்வத் தன்மை, அழகு, இளமை, மகிழ்ச்சி, மணம், இனிமை என்ற தன்மைகள் இருக்கிறது.
ஒருவர் நோய்வாய்ப்பட்டு மரண அவஸ்தையில் இருந்தால் ஆறுமுகா என்றால் போதும்.
எமனின் கோர முகம் கண்முன் தெரியும்போது, ஆறுமுகா என்றால், அவனது ஈரமுகம் ஆறும் தோன்றும் என்பது ஐதீகம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...