Thursday, June 23, 2022

_*வெற்றிலை என்று ஏன் பெயர் வந்தது..?*_

 தாவரவியல் மாணவனுக்கு மகா சுவாமிகள் விளக்கம்..

""எல்லாக் கொடிகளும் பூ விடும், காய் காய்க்கும், ஆனால் வெற்றிலைக் கொடி பூக்காது, காய்க்காது, உட்கொள்ளக்கூடிய வெறும் இலை மட்டும்தான் விடும். அதனால் அது வெற்று இலை
ஒரு சமயம் காஞ்சிமடத்தில் மகா சுவாமிகளைச் சந்திக்க ஒரு மாணவன் வந்திருந்தான். அவனிடம் சுவாமிகள்,""என்ன படிக்கிறாய்?'' என்று கேட்டார். மாணவன் தாவரவியல் படிப்பதாகக் கூறினான்.
சுவாமிகள் தன் முன் வைத்திருந்த பழம், பாக்கு, வெற்றிலைத் தட்டில் இருந்த வெற்றிலையைக் காட்டி,""இதன் பெயர் என்ன?'' என்று கேட்டார். மாணவனும் "வெற்றிலை' என்றான்.
""அதற்கு ஏன் வெற்றிலை என்று பெயர் வந்தது?'' என்று கேட்டார். மாணவன் திகைத்தான், மற்றவர்களும் விழித்தார்கள்.
மகா சுவாமிகள் கூறினார்,""எல்லாக் கொடிகளும் பூ விடும், காய் காய்க்கும், ஆனால் வெற்றிலைக் கொடி பூக்காது, காய்க்காது, உட்கொள்ளக்கூடிய வெறும் இலை மட்டும்தான் விடும். அதனால் அது வெற்று இலை ஆயிற்று'' என்று கூறினார்
இறந்தபிறகும் ஒருவர் பேசப்படுவதை வைத்தே அவரது வாழ்நாள் காலம் நிர்ணயிக்கப்படுகிறது.
May be an image of fruit and text that says 'வெற்றிலையின் நுனி, எப்போதும் கிழக்கு திசையை நோக்கியோ அல்லது வடக்கு திசையை நோக்கியோ இருக்கும்படி கொடுத்தால் அது சுபம் ஆகும். வடக்கு மேற்கு கிழக்கு தெற்கு வெற்றிலை சொர் ணம் பாக்கு தச்சனை பூக்கள் வாழைப்பழம் இத்துடன் பணம் (தட்சணை), பழம், பூ, பொன் வைத்துக் கொடுப்பது உத்தமம்.'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...