Wednesday, June 22, 2022

எல்லோரும் கூறுவது…

 ‘மனசே சரியில்லைங்க,

எதையோ யோசித்துட்டே இருக்கேன், தூக்கமே வர மாட்டேங்குது,
யாராவது ஏதாவது சொல்லிடுறாங்க,
மனசு ஒரே குழப்பமா இருக்கு‘.
இவை அனைத்துக்கும் காரணம், தேவையில்லாத சிந்தனைகள் தான். இச்சிந்தனைகளை ஒதுக்கினாலே மனம் அமைதி அடைந்து விடும்.
*விண்கல (ராக்கெட்) எடுத்துக்காட்டு*
இதுவரை எவ்வளவோ எடுத்துக்காட்டு பல்வேறு பிரச்சனைகளுக்குப் பலர் கூறி கேட்டு இருந்தாலும், சுவாமி திரு சச்சிதானந்தா கூறிய விண்கல எடுத்துக்காட்டு அசத்தல்.
இப்பிரச்சனைக்கு இதைவிடச் சிறப்பான, எளிமையான அனைவரும் புரிந்து கொள்ளும் எடுத்துக்காட்டைக் கூற முடியாது.
விண்கலம் விண்ணுக்கு செல்ல வேண்டும் என்றால், ஈர்க்கும் புவி ஈர்ப்பு விசையை விண்கலம் கடக்க வேண்டும். அதோடு இதைக் கடக்க எரிபொருள் தேவை.
விண்கலம் ஏவப்படும் போது அதில் தொழில்நுட்ப கோளாறுகள் இருக்கக் கூடாது.
இவை அனைத்தும் சரியாக உள்ளது என்றால், புவி ஈர்ப்பு விசையைக் கடந்து விண்கலம் விண்ணுலகுக்கு சென்று விடும்.
செல்லும் போது பல்வேறு சோதனைகளைக் கடந்து, அதிர அதிர மேலே சென்று புவி ஈர்ப்பு விசையைக் கடந்தவுடன் விண்கலம் அமைதியாகி விடுகிறது.
இதை மனதோடு ஒப்பிட்டு அழகாக கூறியுள்ளார்.
*மனம் எதனால் குழப்பம் அடைகிறது?*
எதிர்மறை சிந்தனைகள், கோபம், எதிர்கால பயம், கடந்த கால கவலை, மற்றவர்கள் விமர்சனம், கிண்டல் என்று ஏராளமான காரணங்கள்.
இவற்றை புவிஈர்ப்பு விசை, தொழில்நுட்ப கோளாறுகள் ஆகியவற்றோடு ஒப்பிடலாம்.
நேர்மறை சிந்தனைகள், தியானம், நிகழ்கால எண்ணத்தில் பயணப்படுவதை விண்கல எரிபொருளோடு ஒப்பிடலாம்.
நம் மனதை அமைதியாக்க வேண்டும் என்றால், நம்மைக் கீழே இழுக்கும் எதிர்மறை சிந்தனைகள், கடந்த கால கவலைகள், எதிர்கால பயத்திலிருந்து விடுபட வேண்டும்.
நேர்மறை எண்ணங்களை வளர்த்து, பொறாமை, வன்மம், கோபம் ஆகியவற்றை தவிர்த்துப் பயணித்தால், அனைத்தில் இருந்தும் விடுபட்டு மனம் விண்ணுலகம் என்ற அமைதி நிலையை அடையும்.
புவி ஈர்ப்பு விசையைக் கடந்தால், எப்படி பரபரப்பின்றி விண்கலம் அமைதியாகப் பயணிக்கிறதோ அது போல நம் மனம் அமைதியை நோக்கிப் பயணிக்கும்.
மனம் அமைதியாக இருக்கிறது என்றால், சிந்தனையும் சிறப்பாக இருக்கும். அவசரப்பட மாட்டோம். பொறாமை, வன்மம், கோபம் இருக்காது.
சுவாமி திரு சச்சிதானந்தா அவர்கள் கூறிய இந்த விளக்கம் புரிந்து கொள்ள எளிமையாக இருக்கும் என்று நம்புகிறேன்.
எனவே, நேர்மறை எண்ணங்களை வளர்த்து மன அமைதியைப் பெறுங்கள்.
சுவாமி திரு சச்சிதானந்தா அவர்கள் கூறியதால், இது ஏதோ கடினமான வேலை என்றெல்லாம் நினைக்க வேண்டாம்.
துவக்கத்தில் பழகும் வரையே கடினமாக இருக்கும். பழகி விட்டால், இதற்காக கூடுதல் உழைப்பை செலவிடாமல் இயல்பாகவே இம்மாற்றம் நடக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...