
நாளுக்கு நாள் இணையத்தில் நடக்கும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. எச்சரிக்கையாக இருந்தால் மட்டுமே இந்த வகை மோசடிகளிலிருந்து தப்பிக்க முடியும். இணையத்தளத்தில் என்னென்ன மோசடிகள் நடக்கின்றன. அவற்றை எப்படி வகைபடுத்தி இருக்கின்றனர் என்பதை அறிந்துகொள்வோம்.இணையதள மோசடிகள்
******************************
அ. Phising – பிஷ்ஷிங்
**************************

இது மின்னஞ்சல் மூலம் பயனரை தன்னுடைய இணையதளத்திற்கு வரவழைத்து , அவருடைய வங்கி கணக்கு, பாஸ்வேர்ட் போன்றவற்றை புதுப்பிக்க கேட்டுக்கொள்ளும் மோசடி ஆகும். இந்த வகை மோசடியில் முதலில் ஒரு நம்பகமான மின்னஞ்சல் இமெயில் முகவரிக்கு வந்திருக்கும்.
அதைத் திறந்து அதில் உள்ள இணைப்பை கிளிக் செய்தால், அவர்களுடைய இணையதளத்திற்குச் செல்லும். அங்கு, உங்கள் வங்கி கணக்கு விபரங்களை புதுப்பிக்க கேட்கும். நீங்களும் விபரமில்லாமல், வங்கி கணக்கை விபரங்களை கொடுத்ததால் அவ்வளவுதான்.ஆ. Vishing – விஷ்ஷிங்
****************************

அலைபேசி அல்லது தொலைபேசி மூலம் நடக்கும் மோசடி இது. இதில் எதிர்முனையில் பேசுபவர் வங்கியிலிருந்து பேசுவது போல பேசி, உங்களது வங்கி கணக்கை சரிபார்க்க வேண்டும் என்பார். அதற்கு உங்களுடை வங்கி ரகசிய விபரங்களை கோருவார். தப்பி தவறி நீங்கள் வங்கி கணக்கு விபரங்களை கொடுத்துவிட்டால் அவ்வளவுதான்.
உங்களது பணம் உங்களுக்கு இல்லை. எச்சரிக்கையாக இருப்பது அவசியம். அவரிடம் எதிர் கேள்வி கேட்டு திணறடிக்கலாம்.. அல்லது நான் நேரடியாக வங்கிக்கு சென்று விபரங்களை சமர்ப்பிக்கிறேன் என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டிப்பது நல்லது.இ. Smishing – ஸ்மிஷிங்
****************************

இது SMS மூலம் நடக்க கூடிய ஒரு மோசடி. உங்கள் வங்கியின் பெயரில் அல்லது ஏதேனும் முக்கியமான நிறுவனத்தின் பெயரிலிருந்து உங்களுக்கு SMS வந்திருக்கும். அதில் உங்களுடைய வங்கி கணக்கிற்கு பரிசு பணத்தை அனுப்ப வேண்டும் கூறி, வங்கி விபரங்களை கேட்டிருப்பார்கள்.
அதிகமான பணத்தை பரிசாக பெறுவதற்கு பேராசைப்பட்டு விபரங்களை அனுப்பினால் அவ்வளவுதான். உங்களுடைய வங்கி பணம் முழுவதும் காலி செய்துவிடுவார்கள். முதலில் இதுபோன்ற SMS களை பார்த்தவுடன் வரும் பேராசையை தவிர்க்க வேண்டும். பிறகு வங்கி கணக்கு பற்றிய விபரங்களை அவர்களுக்கு அனுப்பாமல் இருக்க வேண்டும்.ஈ. Skimming – ஸ்கிம்மிங்
****************************

இது ஒரு நுட்பமான திருட்டு. உங்களுடைய Debit Card அல்லது Credit Card – ஐ காப்பியர் கருவில் swipe செய்யும்போது அட்டையின் காந்த பட்டையில் உள்ள விபரங்கள் வேறொரு வெற்று அட்டையில் பதிவு செய்யப்படும். நீங்கள் பர்சேஸ் முடித்த பிறகு, வெற்று அட்டையில் பதிவு செய்யப்பட்ட “டூப்ளிகேட் ” அட்டை மோசடி பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்படும்.உ. Carding – கார்டிங்
************************

டெபிட் கார்ட், கிரடிட் கார்ட் மூலம் பெறப்பட்ட தகவல்களை வைத்துக்கொண்டு பரிவர்த்தனை மேற்கொள்ளும் மோசடி இது. இந்த மோசடியில் சோதனை முயற்சியாக சிறிய அளவில் பரிவர்த்தனை செய்யப்படும். முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டால் பெரிய அளவில் பரிவர்த்தனை செய்வார்கள்.
இது ஒரு நூதனமான பணத்திருட்டு. கண்ணக்குத் தெரியாது. ஆனால் உங்கள் வங்கி கணக்கின் இருப்பு குறைந்து கொண்டே இருக்கும். சிறிய அளவில் இருக்கும்போது சந்தேகம் வராது. பெரிய அளவில் நடக்கும்போதுதான் உங்களுக்கு ஹார்ட் அட்டாக்கவே வந்துவிடும்.
அதனால் யார் என்ன தகவல்கள் எந்த முறையில் கேட்டாலும், வங்கி கணக்குப் பற்றிய விபரங்களை கண்டிப்பாக தெரிவிக்க கூடாது. Debit Card, Credit Card போன்ற அட்டைகளின் விபரங்களையும் பிறருக்கு தெரிவிக்க கூடாது.
ஆன்லைன் மூலம் பர்சேஸ் செய்யும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் பணபரிவர்த்தனை செய்யும் இணையதளம் பாதுகாப்பானதுதானா என்பதை ஒன்றுக்கு 5 முறை நன்றாக சோதித்த பிறகே செயல்படுத்த வேண்டும்.
No comments:
Post a Comment