Monday, June 27, 2022

எம்ஜிஆரோட கேரியர்லயும் சரி... ‘அன்பே வா.

 "என் அப்பா (ஏ.வி.மெய்யப்ப செட்டியார்)

ஆரம்பம் முதலே சினிமாவில் ஒரு பழக்கம் வைத்திருந்தார்.அதாவது படம் எடுக்கலாம் என முடிவு செய்தபின் முதலில் கதையை தான் தேர்வு செய்வார். பலநாள் கதைக்கான டிஸ்கஷன் போயிக்கிட்டே இருக்கும். கதைல எந்தக் குழப்பமும் இல்ல, எல்லாருக்கும் திருப்தியா வந்திருக்குன்னு முடிவான பிறகுதான் ‘சரி, யார் யாரையெல்லாம் நடிக்கவைக்கலாம்’னு பேச்சு வரும்.அப்படித்தான் ரொம்ப வருஷமாவே படம் பண்ணிட்டிருந்தோம்.
பல நடிகர்களை வைத்து படம் செய்திருந்தாலும், ஏனோ எம்ஜிஆரை வைத்து படம் செய்யும் சந்தர்ப்பம் கிடைக்காமலேயே சென்றது.
இது பற்றி பலரும் அப்பாவிடம் கேட்டுவிட்டனர்.
ஒருநாள் அப்பா கூப்பிட்டார். ‘'என்னப்பா, டிஸ்டிரிபியூட்டர்கள் எல்லாரும் ஏவிஎம் இன்னும் எம்ஜிஆரை வைச்சுப் படமே பண்ணலியேனு கேக்கறாங்க’'ன்னு சொன்னார்.
‘எங்களுக்கும் அந்த எண்ணம்தான். ஆனா உங்ககிட்ட சொல்றதுக்கு தயக்கமா இருந்துச்சு. டைரக்டர் திருலோகசந்தர் (ஏ.சி.திருலோகசந்தர்) ஒரு கதைப் பண்ணிவைச்சிருக்கார். கேட்டுட்டுச் சொல்லுங்கப்பா’ன்னு சொன்னேன்.
இதுக்கு நடுவுல, நடிகர் அசோகன், எப்பப் பாத்தாலும் ‘எம்ஜிஆரை வைச்சு ஒரு படம் பண்ணுங்கன்னு சொல்லிக்கிட்டே இருந்தார். அதேபோல எம்ஜிஆர்கிட்ட, ‘அண்ணே!, ஏவிஎம்க்கு ஒரு படம் பண்ணுங்களேன்’ன்னும் சொல்லிக்கிட்டே இருந்தார் அசோகன்.
அப்பா கதையைக் கேட்டாரு. ‘' அவருக்கான கதையா இது?. இல்லையேப்பா.சரி, எதுக்கும் சின்னவர்கிட்ட (எம்ஜிஆர்) கதையைச் சொல்லுங்க. என்ன சொல்றார்னு பாக்கலாம் "ன்னாரு அப்பா.
நான், திருலோகசந்தர், ஆரூர்தாஸ் எல்லாரும் போய், கதையைச் சொன்னோம். முழுக்கதையையும் கேட்ட எம்ஜிஆர், அப்பாவின் கூற்றுப்படி மே, '’இது என் படம் இல்ல. என் ஃபார்முலா எதுவுமே இந்தப் படத்துல இல்ல. அம்மா கேரக்டர் இல்ல. தங்கச்சி இல்ல. சண்டைக்காட்சிகள் கிடையாது. இது ஏ.சி.திருலோகசந்தர் படம். இருந்தாலும் கதை நல்லாருக்கு'’ ஓகேன்னு ஒத்துக்கிட்டார்.
ஆனா, இதுவரைக்கும் எந்தவொரு நடிகருக்காகவும் ஏவிஎம் கதை பண்ணினது இல்ல. கதை பண்ணுவோம்; அதுக்கு யாரு பொருத்தமோ, அவரை ஹீரோவாப் போடுவோம். இத்தனைக்கும் ‘அன்பே வா’ படத்து கதையை எம்ஜிஆருக்காகத்தான் யோசிச்சோம். ‘ஒருவேளை எம்ஜிஆருக்கு கதை பிடிக்கலேன்னா, ஜெய்சங்கரையும் ஜெயலலிதாவையும் வைச்சு எடுக்கறதா முடிவு பண்ணிருந்தோம். ஆனா, எம்ஜிஆர் நடிக்க சம்மதிச்சாரு."
முழுக்க முழுக்க காமெடியை மையப்படுத்தி, எம்ஜிஆரின் ஃபார்முலா இல்லாமல், எம்ஜிஆர் ரசிகர்களை மட்டுமல்லாது, அனைத்து தரப்பினரையும் ரசிக்க வைத்த படம் "அன்பே வா".
ஏவிஎம் தயாரிப்புலயும் சரி, எம்ஜிஆரோட கேரியர்லயும் சரி... ‘அன்பே வா’ திரைப்படம், வித்தியாசமான வெற்றிப்படம்.
ஏவிஎம்.சரவணன்.
"விகடன் பொக்கிஷம்".
May be an image of 2 people, people standing and text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...