Thursday, June 30, 2022

சுயேச்சை சின்னத்தில் அ.தி.மு.க.,வினர் போட்டியிடும் நிலை!

  உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர்கள் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

ADMK, election, அதிமுக சின்னம்


தமிழகத்தில் காலியாக உள்ள 510 உள்ளாட்சி பதவிகளுக்கு வரும் 9ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் நகர்ப்புற உள்ளாட்சிகளில் 12 பதவிகளுக்கும் ஊரக உள்ளாட்சியில் 22 பதவிகளுக்கும் கட்சி அடிப்படையில் தேர்தல் நடக்க உள்ளது. இதில் போட்டியிட அ.தி.மு.க., சார்பில் அக்கட்சியினர் மனு தாக்கல் செய்தனர். அவர்கள் அ.தி.மு.க., வேட்பாளர்கள் என்பதற்கு அடையாளமாக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர், 'படிவம் ஏ, பி' ஆகியவற்றில் கையெழுத்திட்டு கொடுக்க வேண்டும்.


latest tamil news



அவ்வாறு கொடுக்கப்பட்டால் அவர்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படும். தற்போது கட்சி தலைமைப் பதவி தொடர்பாக, பழனிசாமி - பன்னீர்செல்வம் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் கட்சி வேட்பாளர்களுக்கு உரிய படிவம் வழங்கப்படவில்லை. அதனால் மனு தாக்கல் செய்த அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு, சுயேச்சை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில், அ.தி.மு.க., வேட்பாளர்கள் தங்கள் மனுவை வாபஸ் பெற்றனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...