Friday, June 24, 2022

கட்சியினர் கஜானாவை நிரப்பும் கனிம கொள்ளை.

 மருத்துவ துறையிலும், வீட்டு வசதி துறையிலும் முறைகேடு நடந்ததாக, சில நாட்களுக்கு முன் குற்றம் சாட்டிய, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 'கோவை மாவட்டம் முழுதும் உள்ள, ௧௪ சோதனை சாவடிகள் வாயிலாக, கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுகின்றன. கனிம வள கடத்தல், கிராவல் மண் விற்பனை வாயிலாக, தி.மு.க.,வினர், பல கோடி ரூபாய் கல்லா கட்டுகின்றனர்' என்ற, அடுத்த 'குண்டை' துாக்கிப் போட்டுள்ளார்.


அண்டை மாநிலமான கேரளாவில், கனிமங்களை வெட்டி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், கல், மணல், ஜல்லி, கிராவல் மண் உள்ளிட்ட கனிம வள பொருட்களின் தேவை, கேரளாவில் உள்ளது. இதைப் பயன்படுத்தி, கோவையில் இருந்து கள்ளத்தனமாக கேரளாவுக்கு கனிமவளங்கள் லாரி லாரியாக கடத்தப்படுகின்றன.ஆளும் கட்சியான தி.மு.க.,வினரே, இந்தக் கடத்தலிலும், கனிம கொள்ளையிலும் முக்கிய பங்கு வகிப்பதால், அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல், கலெக்டர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கையைப் பிசைந்தபடி நிற்கின்றனர்.



சமீபத்தில், நெல்லை மாவட்டத்தில் உள்ள கல்குவாரி ஒன்றில், பாறைகள் சரிந்து விழுந்த விபத்தில் சிலர் இறந்தனர். இதுதொடர்பாக, அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, அந்த மாவட்டம் முழுக்க முறைகேடாக செயல்பட்ட குவாரிகளுக்கு, ௫௦௦ கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனாலும், அது வசூலிக்கப்படுமா என்பது சந்தேகமே. காரணம், குவாரிகளை இயக்கியவர்களில் பலர் அரசியல்வாதிகள். 'அரசின் சொத்துக்களான கனிம வளங்களை, சட்டவிரோதமாக கொள்ளையடிக்கும் செல்வாக்கான நபர்களை, அரசு கடுமையாக கையாள வேண்டும்' என, தமிழக அரசை சில மாதங்களுக்கு முன், சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. ஆனாலும், அந்த உத்தரவு காற்றில் பறக்கவிடப்பட்டு, ஆளும் கட்சியினர் ஆதரவோடு, கனிம கொள்ளை கனஜோராக நடக்கிறது.



இது, அண்ணாமலையின் புகார் வாயிலாக தற்போது உறுதியும் செய்யப்பட்டிருக்கிறது. 'கள்ளன் பெரியவனா... காப்பவன் பெரியவனா' என்ற பழமொழி உண்டு. கனிம வள கடத்தலில், திருட்டுத்தனம் செய்பவர்களும், காக்கும் பணியில் உள்ள ஆட்சியாளர்களும் ஒருவராகவே இருப்பதால், போலீசார் உள்ளிட்ட பலரும் கைகட்டி வேடிக்கை பார்க்கும் நிலைமையே உள்ளது. அதனால், கட்சியினரின் கஜானாவை நிரப்பும் கனிம கொள்ளை, முழுமையாக தடுக்கப்படுமாஎன்பதே மில்லியன் டாலர் கேள்வி?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...