Thursday, June 23, 2022

நிச்சயமாக இன்னொரு தொழிற்சாலை தான் வரும். ஆனால் அது அமிர்தத்தை கக்கும்.

 ஸ்டெர்லைட் ஆலை விற்பனைக்கு வருவதாக செய்தி. அது விற்கப்பட்டு யாராவது அந்த ஆலையை துவங்கினால், சுமுகமாக செயல் படும் என்று கனிமொழி கூறியது விநோதமாக உள்ளது. ஸ்டெர்லைட் விவகாரம் வெடிக்க காரணமாக இருந்த ஒரு மதம் மாற்றும் பாதிரியார், கனிமொழிக்கு நெருங்கிய நண்பர் என்ற செய்தி வந்தது அந்த சமயத்தில்.

மக்களுக்கு தெரிய வேண்டும், ஸ்டெர்லைட் இடத்தில் என்ன ஆலை துவங்க வேண்டும். யார் துவங்கப் போகிறார்கள். மது ஆலையா? இல்லை ஸ்டெர்லைட் நிறுவனம் நடத்திக் கொண்டு இருந்த தொழில் சம்பந்தப்பட்டதா? அப்படி என்றால், எதற்கு போராட்டம்? யாரால் தூண்டப்பட்டு, சீரழிவை செய்தார்கள்? மக்கள் அதை தெரிந்து கொள்ள வேண்டும். அக்னி பாதைக்கு எப்படி வன்முறை வெடித்ததோ, அதே போல் ஸ்டெர்லைட் வன்முறையை யார் தூண்டினார்கள் என்று ஆலோசனைக் குழுவின் முதல்வர் ஒரு குழு அமைக்க வேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலையை யாராவது வாங்கிய பின், சமூகமாக நடைபெறும் என்றால் என்ன அர்த்தம்? வன்முறையை வளர்த்தவர்கள், இனி தூண்ட மாட்டார்கள் என்று அர்த்தமா? அல்லது சமூகமாக நடைபெற வேண்டும் என்றால், குடும்பக் கட்சியுடன் சுமூகமாக உறவு வைத்துக் கொள்ள வேண்டுமா?. ஸ்டெர்லைட் போராட்டத்தில் கனிமொழி முன்னின்று நடத்தியது திமுக நடத்தியது போல் இருந்தது. ஸ்டாலின் அவர்கள் திருமணத்தில் இந்து மத சடங்குகளை அச்சமயம் தாக்கினார். ஓசி சாப்பாடு கூட்டம் இந்து கடவுள்களை தாக்கியது. ஒரு பாதிரியார் இந்துக்கள் மூக்கில் குத்த் வேண்டும் என்றார். இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து நடத்திய நாடகமே ஸ்டெர்லைட் போராட்டம். இந்தப் போராட்டத்தின் உண்மை நிலை அறிய, அதன் பின் யார் இருந்தார்கள் என்று தெரிந்து கொள்ள, மத்திய அரசு ஒரு குழு அமைக்க வேண்டும்.
கோவையில் பல மில்கள் மூடக் காரணம் கம்யூனிஸ்ட் மற்றும் திராவிடக் கட்சிகள் என்றால் தவறும் இல்லை. கோவையில் தொழில் சம்பந்தமான அனைத்தும் மறையக் காரணம், இந்த இரண்டு கூட்டங்கள் தான்.
வந்தே மாதரம் பாரத் மாதா கீ ஜெய்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...