பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழக காவல்துறை தலைமையகத்தில் இருந்து (29-ந்தேதி) ஒரு பத்திரிகை செய்தி வெளியானது. தமிழக காவல் துறை டி.ஜி.பி.யாகிய சைலேந்திர பாபுவின் ஒப்புதலோடு தான் வெளியிட்டிருப்பார்கள் என்ற நம்பிக்கையோடு ஒரு முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியாகவும், தமிழக பா.ஜ.க. மாநில தலைவராகவும் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளேன். நான் பல கருத்துகள் கூறி விசாரணையின் போக்கை திசை திருப்ப முயற்சிப்பதாக தொடங்குகிறது காவல் துறை தலைமையகத்தில் இருந்து வெளியிடப்பட்ட பத்திரிகை செய்தி. ஒரு ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி என்கிற முறையில் ஆளும் அரசை கேள்வி எழுப்புவதும் மக்களிடம் உண்மையை கொண்டு சேர்ப்பதும் எங்களது பொறுப்பாக உணருகிறோம். விசாரணையின் போக்கை திசை திருப்புவதாக நான் கருத்துகள் சொன்னதாக நீங்கள் கூறுகிறீர்கள். கோவை தற்கொலைப்படை தாக்குதல் வழக்கின் போக்கை திசை திருப்பும் விதமாக என்ன கேட்டுவிட்டோம் என்பதை காவல் துறை உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும். இம்மாதம் 26-ந்தேதி இந்த வழக்கை தமிழக அரசு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றியதை வரவேற்று மீண்டும் இதுபோன்ற பயங்கரவாத சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க சில ஆலோசனைகளை அரசுக்கு முன்வைத்தோம். தமிழக காவல் துறையை சுதந்திரமாக செயல்பட விடுங்கள் என்பதும் நாங்கள் கொடுத்த ஆலோசனையில் ஒன்று 27-ந்தேதி மத்திய உளவுத்துறை கொடுத்த குறிப்பிட்ட எச்சரிக்கைக்கு பின்னரும் தமிழக அரசு உறங்கிக் கொண்டிருந்தது ஏன் என்றும் பயங்கர வாத சதிச் செயலில் ஈடுபட்ட ஜமேஷா முபினை கண்காணிக்க கொடுக்கப்பட்ட எச்சரிக்கையை காவல் துறை பின்பற்றாதது ஏன் என்பதையும் கேட்டிருந்தோம். 18-ந்தேதி மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் வழங்கிய பொதுவான சுற்றறிக்கை என்றும், இதில் கோவை தாக்குதல் பற்றி குறிப்பிட்ட எச்சரிக்கை எதுவும் இல்லை என்ற வாதத்தை நேற்று பத்திரிகை செய்தி வாயிலாக தமிழக காவல் துறை தலைமை முன்வைத்துள்ளது. மேலும், 18-ந்தேதி சுற்றறிக்கை தங்களுக்கு 21-ந்தேதி கிடைத்ததாகவும், அதற்கு பின் அதன் மேல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர். இது ஒரு பொய். 21-ந்தேதிக்கு முன்பே மத்திய உள்துறையின் சுற்றறிக்கை தமிழக காவல் துறைக்கு வந்துவிட்டது என்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தில் தாக்குதல்கள் நடக்க வாய்ப்பு உள்ளதாகவும், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதை காவல் துறை மறுக்குமா?. 21-ந்தேதி அனைத்து போலீஸ் கமிஷனர்களுக்கும் காவல் துறை தலைமை அலுவலகத்தில் இருந்து பகிரப்பட்ட இந்த அறிக்கையில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடந்துவிடக்கூடாது என்பதை சுட்டிக்காட்டி போதிய நடவடிக்கைகளை எடுங்கள் என்று குறிப்பிட்டதை மறுப்பீர்களா?. "சீக்ரெட்" என்று குறிப்பிடப்பட்ட மத்திய அரசின் ஆவணம் தி.மு.க. செய்தி தொடர்பாளருக்கு எப்படி போனது. இதை காவல் துறை தலைமை அவருக்கு வழங்கியதா? அல்லது அரசு அதிகாரிகள் வழங்கினார்களா?. இதுபோன்ற நடவடிக்கைகள் தான் நடந்த பயங்கரவாத தாக்குதலை திசை திருப்பும் முயற்சி. இதற்கு நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம். கடந்த 23-ந்தேதிக்கு முன்னரே ஜமேஷா முபின் பற்றி தகவல்கள் காவல் துறை தலைமை மற்றும் உளவுத் துறைக்கு காவல் துறையில் இயங்கும் ஒரு தனிப்பிரிவு வழங்கியுள்ளது. 96 நபர்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகவும், மக்கள் கூடும் இடங்களில் இவர்கள் தனி நபராக திடீர் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகவும் ஒரு பட்டியலை கொடுத்துள்ளது அந்த தனிப்பிரிவு. அதில் ஜமேஷா முபின் 89-வது இடத்தில் உள்ளார். இந்த ஆண்டு ஜூலை மாதம் 19-ந்தேதி கொடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கைக்கு பின்னரும் ஜமேஷா முபினை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வராமல் கோட்டைவிட்டுள்ளது தமிழக காவல் துறையின் உளவுத்துறை. விசாரணையின் போக்கை திசை திருப்புதல் என்று பத்திரிகை செய்தியில் குறிப்பிட்ட டி.ஜி.பி. சைலேந்திரபாபுவுக்கு சில கேள்விகளை முன்வைக்கிறோம். பெரோஸ் இஸ்மாயில் என்பவர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் இவருக்கு தொடர்பு இருந்ததால் இவர் ஐக்கிய அரபு நாட்டில் இருந்து கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டார். அதன் பின் இவர் கோவையில் தங்கியிருந்தார். இவர் தமிழக உளவுத்துறை அல்லது கோவை காவல் துறையினரின் கண்காணிப்பு வளையத்தில் இருந்து தப்பியது எப்படி?. 23-ந்தேதி நடந்த சம்பவத்துக்கு பிறகு காவல் துறை தனிப்பிரிவு கொடுத்த அறிக்கையின்படி நடைபெற்றது, தற்கொலைப்படை தாக்குதல் சம்பவம் என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். இதை அறிவிக்காமல் காவல் துறை மற்றும் தமிழக அரசு மவுனமாக இருப்பதன் காரணம் என்ன?. தமிழக ஆளுநர் இந்த குண்டு வெடிப்புக்கு காரணமானவர் என்பது போன்று சமூக வலைதளங்களில் பரப்பி வரும் தி.மு.க.வினர் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?. வழக்கின் போக்கை திசைதிருப்பும் முயற்சியாக மேற்கொள்ளப்படும் பொய் பரப்புரைகளை கண்டும் காணாமல் இருப்பது ஏன்?. நான் கர்நாடகத்தில் காவல் அதிகாரியாக இருந்ததை தங்களது பத்திரிகை செய்தியில் சுட்டிக்காட்டி இருந்தீர்கள். நான் கர்நாடகத்தில் காவல் அதிகாரியாக இருந்தபோது எனது நடவடிக்கைகளை நீங்கள் இன்று ஒரு தனிப்படை அமைத்து விசாரித்துக் கொள்ளுங்கள். தமிழனின் பெருமையை கர்நாடகாவில் நிலைநாட்டி விட்டு வந்திருக்கிறேன். மீண்டும் காக்கி அணிய எண்ணம் இல்லை, ஒரு காலத்தில் காக்கி அணிந்தவன் என்பதை மறந்துவிட வேண்டாம். இதுபோன்ற பயங்கரவாத சம்பவங்கள் மீண்டும் தமிழ் மண்ணில் நிகழாமல் இருக்க உடனடியாக சமரசங்கள் இன்றி நடவடிக்கை எடுங்கள் என்பதையும் தமிழக மக்களின் சார்பாக ஒரு வேண்டுகோளாக உங்களிடம் முன்வைக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Monday, October 31, 2022
உண்மையான நேர்மையான உழைப்புக்கு எப்போதும் மதிப்பும் மரியாதையும் உண்டு.
சமையல் கலைஞர்களுக்கு உதவியாக சமையல் பாத்திரம் கழுவிக்கொடுக்கும் வேலை பார்த்தவர் இன்று சபரிமலை சன்னிதானம் வரும் பல ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு சுவையான உணவு தந்துவருகிறார்.
இன்றும், நாளையும் "ஆரஞ்சு அலர்ட்" எச்சரிக்கை- சென்னை மற்றும் புறநகரில் கனமழை எச்சரிக்கை.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் தொடங்கியது. இதையடுத்து அநேக இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வட இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு, சுழற்சி நிலவுகிறது. இதையடுத்து தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் நவம்பர் 4-ந்தேதி வரை 5 நாட்கள் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும் இன்றும் நாளையும் திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். நாளை (1-ந்தேதி) திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும். சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2-ந்தேதி காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்கள் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். நவம்பர் 3-ந்தேதி தென் மாவட்டங்கள், டெல்டா பகுதிகள், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 4-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழையும் செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டமாக காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மற்றும் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. பருவமழை தொடங்கி பரவலாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மழை விட்டு விட்டு பெய்கிறது. சென்னையில் இன்று காலையில் மழை பெய்தது. அதன்பின்னர் லேசான வெயில் இருந்தபோதும் உடனே மேகங்கள் சூழ்ந்து இருண்டு மழை பெய்கிறது. சென்னையை ஒட்டிய புறநகர் பகுதியிலும் அடுத்த 2 நாட்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
வைகோவுக்கு ஒரு நாளும் ஞானம் வராது!...
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 1956 நவம்பர் 1-ம் நாள் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, அறிவிப்பு வெளியிடப்பட்டது. சென்னை மாகாணத்தில் இருந்து தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழி பேசும் மக்கள் அடங்கிய பகுதிகள் முறையே ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களுடன் இணைக்கப்பட்டன. தமிழ் மொழி பேசும் மக்களின் தாயகமாக சென்னை மாநிலம் உருவானது. மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது, தமிழகம் பல பகுதிகளை இழந்தது. தமிழர் தாயகத்தின் எல்லைகளை வரையறுக்க வடக்கு எல்லைப் போராட்டமும், தெற்கு எல்லைப் போராட்டமும் மிக வீரியமாக முன்னெடுக்கப்பட்டன. மார்ஷல் நேசமணி, எஸ்.சாம் நத்தானியல், பி.எஸ்.மணி உள்ளிட்டத் தலைவர்கள் மக்களைத் திரட்டி, தெற்கு எல்லைப் போராட்டத்தை நடத்தினர். போராட்டக் களத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். வடக்கு எல்லையைக் காப்பாற்ற சிலம்புச் செல்வர் ம.பொ.சி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. பேரறிஞர் அண்ணா எல்லைப் போராட்டங்களுக்கு ஆதரவு நல்கினார். தி.மு.க. தொண்டர்கள் எல்லைப் போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றனர் என்பதும் மறுக்க முடியாத வரலாறு ஆகும். தமிழர் தாயகம் உருவான நவம்பர் 1-ல் எல்லைப் போராட்டத்தை முன்னெடுத்த தலைவர்களுக்கும், உயிர்த் தியாகம் செய்தவர்களுக்கும் வீரவணக்கம் செலுத்துவோம். தமிழ்த் தேசிய இனம் போராடிப் பெற்ற உரிமைகளைப் பறித்து, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்று இந்து ராஷ்டிரத்தை உருவாக்கக் கூப்பாடு போடும் இந்துத்துவ சனாதன சக்திகளை தமிழ் மண்ணில் இருந்து துடைத்து எறிய இந்நாளில் உறுதி ஏற்போம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
காந்தாரா...
18ம் நூற்றாண்டின் இறுதியில் கர்நாடகாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை ஆண்ட ஒரு அரசன் நிம்மதி இழந்து தவிக்கிறார்.
Monday, October 24, 2022
வடஇந்திய தொழிலாளர்களைக் கண்டு பொறாமைப்படுவது சரியல்ல.
பெரும்பாலான அடுக்குமாடிக் கட்டிடங்களில் அவர்கள்தான் பணியாற்றுகின்றனர்.
கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாகப் பாவித்துத் – தானும் தன் பொல்லாச் சிறகைவிரித்து ஆடினால் போல....
ஆறுமுகசாமி ஆணையம்
பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி ! அலறவிட்ட அஸ்வின்.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி.
கோவை கார் வெடிப்பு: சில சந்தேகங்கள்; சில கேள்விகள்?
கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து நேற்று முன் தினம் டி.ஜி.பி., சைலேந்திர பாபு கூறுகையில், ''குறிப்பிட்ட அந்த இடத்தில் போலீஸ் செக் போஸ்ட் இருக்கிறது. சம்பவம் நடந்த நேரத்தில் ஒரு எஸ்.ஐ., 2 கான்ஸ்டபிள் இருந்துள்ளனர். அவர்களை கடந்து கார் செல்ல முடியவில்லை. இறங்கி ஓடியிருக்கலாம். தப்பி ஓடும்போது சிலிண்டர் விபத்து நடந்திருக்கும்,'' என்று கூறினார்.
எனினும், கார் வெடித்துச் சிதறிய சம்பவத்தில் நிலவும் சந்தேக கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டிய அவசியம் போலீசுக்கு ஏற்பட்டுள்ளது.
* 'காரில் வந்த ஜமேஷா முபீன், திடீரென இறங்கி தப்பி ஓடினார்' எனில், காருக்குள் இருந்த சிலிண்டர்களை வெடிக்க வைத்தது யார்?
* தப்பியோடியபோது வெடித்திருந்தால் சம்பவ இடத்திலேயே பலத்த தீக்காயங்களுடன் அந்நபர் பலியானது எப்படி?
* ஜமேஷா முபீன் தப்பியோடும்போது, அவருடன் வந்திருந்த வேறு நபர்கள் காஸ் சிலிண்டர்களை தொலைவில் இருந்தவாறு வெடிக்கச் செய்துவிட்டு தப்பிவிட்டார்களா?
* நடந்த சம்பவத்தை வைத்துப்பார்க்கும்போது 'தற்கொலை தாக்குதலாகவும்' இருக்க வாய்ப்புள்ளதாக சிலர் அஞ்சுகின்றனர். ஆனால் அவ்வாறில்லை என, போலீஸ் தரப்பில் உடனடியாக மறுக்கப்பட்டது. இந்த முடிவுக்கு போலீசார் உடனடியாக வர ஏதுவான வலுவான ஆதாரங்கள் ஏதும் கிடைத்துள்ளனவா?
* கார் வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இருந்த நபர்கள் யார், எந்த அமைப்பினர்?
சித்திரை ஆட்டத்திருநாள் பூஜை: சபரிமலை நடை திறப்பு.
சித்திரை ஆட்டத்திருநாள் பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது.
மறைந்த திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா சபரிமலையில் செய்த சேவைகளுக்காக அவரது பிறந்த நாளில் சிறப்பு பூஜை நடக்கிறது.
இன்று நடக்கும் இப்பூஜைக்காக நேற்று மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து பக்தர்கள்தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.
இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்த பின் தந்திரி கண்டரரு ராஜீவரரு அபிேஷகம் நடத்தி நெய்யபிேஷகத்தை தொடங்கி வைப்பார். பின் வழக்கமான பூஜைகளுடன் மன்னர் குடும்பத்துக்காக சிறப்பு பூஜைகள் நடக்கும்.இரவு 7:00 மணிக்கு படிபூஜை நடக்கும். இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.
அதன் பின்னர் 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் மண்டல கால பூஜைகளுக்காக நவ., 16 மாலை நடை திறக்கப்படும்.
கார்த்திகை ஒன்றாம் தேதியான நவ.,17 அதிகாலை 4:00 மணிக்கு நடைதிறந்ததும் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் ஆரம்பமாகும்.
ஐ.மு., கூட்டணி ஆட்சியில் ஹிந்தியை தி.மு.க., எதிர்க்காதது ஏன்?
'மத்தியில் காங்., தலைமையிலான ஐ.மு., கூட்டணி ஆட்சியின் போது, உள்துறை அமைச்சராக இருந்த சிதம்பரம், ஹிந்திக்கு முக்கியத்துவம் அளித்து தாக்கல் செய்த அறிக்கையை எதிர்க்காமல் தி.மு.க., வேடிக்கை பார்த்தது ஏன்?' என, புதுடில்லியில் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான பார்லிமென்ட் குழு, தன் 11வது அறிக்கையை, ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் தாக்கல் செய்தது.
இந்த குழு அளித்த பரிந்துரைகளில் கூறப்பட்டிருந்ததாவது:
பல்வேறு துணைக் குழுக்கள் மற்றும் பார்லிமென்ட் குழுவில் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் பல பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆங்கிலம் என்பது அன்னிய மொழி.
ஆங்கில வழிக் கல்வி என்ற காலனியாதிக்க நடைமுறையை கைவிட வேண்டும் என்று பெரும்பாலான உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். புதிய தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், ஹிந்தி மற்றும் பிராந்திய மொழிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
அனைத்து உயர்நிலைக் கல்வி நிறுவனங்களிலும் ஹிந்தி மற்றும் பிராந்திய மொழி வழியிலேயே பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
ஐ.ஐ.டி., உள்ளிட்ட தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், தொழில்நுட்பமல்லாத கல்வி நிறுவனங்களிலும், 100 சதவீதம் இதை பின்பற்ற வேண்டும்.
ஹிந்தி பேசும் மாநிலங்களில் ஹிந்தியிலும், மற்ற மாநிலங்களில் அந்தந்த பிராந்திய மொழியிலும் பாடம் கற்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
அரசுக்கு கடிதம்
பார்லிமென்ட் குழுவின் இந்த பரிந்துரைகளுக்கு, தி.மு.க., தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டது. கல்வி விஷயத்தில் ஹிந்தி திணிக்கப்படுவதாக கூறி, அந்தக் கட்சியின் இளைஞர் அணி சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
தமிழக முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலினும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.
ஆனால், இதேபோல் ஒரு அறிக்கை, காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் ஜனாதிபதியிடம் தாக்கல் செய்யப்பட்டதாகவும், அதற்கு, அப்போது தி.மு.க., தரப்பில் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து டில்லி அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது:
கடந்த 2011ல் காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, தமிழகத்தைச் சேர்ந்த சிதம்பரம் உள்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
அப்போது பார்லிமென்ட் அலுவல் மொழி குழுவின் தலைவராக இருந்த சிதம்பரம், இதுபோன்ற ஒரு அறிக்கையை, ஜனாதிபதியாக இருந்த பிரணாப் முகர்ஜியிடம் தாக்கல் செய்தார்.
ஆனால், அப்போது தி.மு.க., எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் வேடிக்கை பார்த்தது.
சிதம்பரம், தி.மு.க.,வுக்கு வேண்டப்பட்டவர் என்பது, இதற்கு முக்கிய காரணம்.
மேலும், தற்போது அமித் ஷா தாக்கல் செய்த அறிக்கைக்கு, தி.மு.க., உடனடியாக எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் இறங்கியதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன.
கடந்த சட்டசபை தேர்தலின்போது தி.மு.க., அளித்த பல வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் வாக்காளர்கள் அதிருப்தியில் உள்ளனர். மேலும், தி.மு.க.,வின் குடும்ப ஆட்சி மீதும் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
சமீபத்தில் நடந்த தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் பேசிய ஸ்டாலினும், அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் செயல்பாடு குறித்து விரக்தியாக பேசினார்.
'இவர்களை நினைத்தால் துாக்கம் கூட வர மறுக்கிறது' என, அவர் பகிரங்கமாக தெரிவித்து இருந்தார்.
கட்சியிலும், ஆட்சியிலும் ஸ்டாலின் தன் பிடியை இழந்து விட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
எனவே, இந்த பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே, ஹிந்தி ஒழிக கோஷத்தை தி.மு.க., சற்றும் தாமதிக்காமல் கையில் எடுத்துள்ளது.
தமிழ் புத்தகங்கள்
'ஹிந்தி ஒழிக' என்ற கோஷத்தை, ஆரம்ப காலத்தில் தன் அரசியல் வளர்ச்சிக்காக தி.மு.க., கையில் எடுத்தது. இப்போது நிலைமை மாறி விட்டது. தொழில்நுட்பங்கள் வளர்ச்சி அடைந்துள்ளன.
மத்திய பிரதேசத்தில் மருத்துவ கல்விக்கான பாடப்புத்தகங்கள் ஹிந்தியில் வெளியிடப்பட்டன. தமிழகத்திலும் மருத்துவ கல்வி தொடர்பான தமிழ் புத்தகங்கள் உள்ளன.
இப்போது, ஆங்கிலத்தில் இருந்து ஹிந்திக்கோ, வேறு மொழிகளுக்கோ முக்கியமான விஷயங்களை மொழி பெயர்ப்பது, மிகவும் எளிதான விஷயமாகி விட்டது. இந்த 'டிஜிட்டல்' யுகம், அதை மிகவும் சுலபமாக்கி விட்டது.
எந்த ஒரு தகவலையும், 'கூகுள்' தொழில்நுட்பம் வாயிலாக, ஒரு மொழியில் இருந்தும், வேறு மொழிக்கு எளிதில் மொழி பெயர்க்க முடியும்.
எனவே, அரதப் பழசான ஹிந்தி ஒழிப்பு கோஷத்தை தி.மு.க., மீண்டும் துாசு தட்டுவது, அந்த கட்சிக்கு எந்த வகையிலும் கை கொடுக்காது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பெண்கள் நம் நாட்டின் கண்கள்.
உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில்ஒருவரான "வாரன் பபேட்" நமக்கு கூறும் அறிவுரை.!
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
Numbering of vehicle in India is done at Regional/Sub Regional Transport Offices located in various states. Each vehicle number has presc...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...