Monday, October 17, 2022

அண்ணாமலை புகாரில் சிக்கிய அதிகாரிகள் இடமாற்றம்.

 தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட புகார் பட்டியலில் குறிப்பிடப்பட்ட, மூத்த திட்ட அதிகாரி உள்ளிட்ட எட்டு அதிகாரிகளை இடமாற்றம் செய்து, சி.எம்.டி.ஏ., உத்தரவிட்டுள்ளது.


குறிப்பிட்ட ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சாதகமாக, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., செயல்படுகிறது என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, கடந்த ஜூனில் புகார் தெரிவித்தார். அதில், சி.எம்.டி.ஏ., வில் மூத்த திட்ட அதிகாரியாக உள்ள ருத்ரமூர்த்தி உள்ளிட்ட சிலரின் பெயரை, அண்ணாமலை குறிப்பிட்டு இருந்தார்.

அப்போது, 'அண்ணாமலை தெரிவித்த புகார்களில் ஆதாரம் இல்லை' என, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில், அண்ணாமலை புகாரில் சுட்டிக்காட்டப்பட்ட, மூத்த திட்ட அலுவலர் ருத்ரமூர்த்தி உள்ளிட்ட எட்டு அதிகாரிகள், வெவ்வேறு பிரிவுகளுக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.

நான்கு மூத்த திட்ட அலுவலர்கள், இரண்டு துணை திட்ட அலுவலர்கள், இரண்டு உதவி திட்ட அலுவலர்கள் என, எட்டுபேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். சென்னை நந்தம்பாக்கத்தில், குறிப்பிட்ட ஒரு நிறுவனத்துக்காக, நில வகைபாடு மாற்றத்தில், அதிகாரிகளுக்குள் எழுந்த பிரச்னையும், இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...