Monday, October 24, 2022

பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி ! அலறவிட்ட அஸ்வின்.

 பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி.

விராட் கோலி 53 பந்துகளில் 82 ரன்கள் குவித்து அதிரடி
பாகிஸ்தான் அணி 160 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
ஆனால், இந்திய அணி பேட் செய்ய வந்தபோது அதற்கு அதிர்ச்சி காத்திருந்தது.
கேப்டன் ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், அக்சர் பட்டேல் என்று முன்னணி பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறிய நிலையில், ஒரு கட்டத்தில் இந்தியா 11வது ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 54 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
அப்போது முகமது நவாஸ் பந்து வீசிய 12-வது ஓவர் இந்தியாவுக்கு திருப்புமுனை ஓவரானது.
இந்த ஓவரின் முதல் பந்தை ஹர்திக் பாண்ட்யா சிக்சருக்கு பறக்கவிட, தனது பங்கிற்கு 4வது பந்தை விராட் கோலியும் சிக்சருக்கு விளாசினார். கடைசி பந்தில் மீண்டும் ஹர்திக் பாண்டியா சிக்சர் அடித்ததால் ஒரே ஓவரில் 20 ரன்களை சேர்த்தது இந்தியா.
இதன் பிறகு இந்தியாவிந் ஆட்டத்தில் சூடு பிடித்தது. ரன்கள் வேகமாக வரத் தொடங்கின. இந்நிலையில், விராட் கோலி தனது அரை சதத்தை பூர்த்தி செய்து ஆட்டத்தில் முன்னேறினார்.
இந்நிலையில், கடைசி ஓவர் இரண்டு அணிகளுக்குமே சவாலானதாக இருந்தது. இரு அணி வீரர்களுமே பதற்றத்தில் இருந்தனர். 16 ரன் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் ஓவரை எதிர்கொண்டது இந்தியா. பாகிஸ்தான் பௌலர் முகமது நவாஸ் இந்த ஓவரை வீசினார்.
விராட் கோலியோடு இணைந்து நின்று உறுதியாக ஆடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டுவந்த ஹர்திக் பாண்ட்யா முதல் பந்தில் ஆட்டம் இழந்தார். இது தவிர அடுத்து ஆட வந்த தினேஷ் கார்த்திக் விக்கெட்டும் இந்த ஓவரில் பறிபோனது. அதே நேரம், பாகிஸ்தான் அணியும் பதற்றத்தில் நோ பாலும், வைடுமாக வீசியது. ஃப்ரீஹிட் பந்தில் ஸ்டம்ப்பில் பந்து பட்ட நிலையிலும் இந்தியா அந்த பந்தில் 3 ரன்கள் எடுத்தது. இப்படி பரபரப்பாக நடந்த ஆட்டத்தின் இறுதிப் பந்தில் இந்தியா வெற்றி பெற்றது.
அணியை மீட்ட ஜோடியில் விராட் கோலி 82 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். ஹர்திக் பாண்ட்யா 40 ரன்கள் எடுத்து அவுட் ஆகியிருந்தார்.
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதற்கு முன்பாக, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் 11 முறை டி20 போட்டிகளில் மோதியுள்ளன. அவற்றில் எட்டு போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது. பாகிஸ்தான் மூன்றில் வென்றுள்ளது.
இந்த 11 போட்டிகளில் இரண்டு போட்டிகள் இந்த ஆண்டு நடந்தவை. அவற்றில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.
May be an image of 6 people, people standing and text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...