கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து நேற்று முன் தினம் டி.ஜி.பி., சைலேந்திர பாபு கூறுகையில், ''குறிப்பிட்ட அந்த இடத்தில் போலீஸ் செக் போஸ்ட் இருக்கிறது. சம்பவம் நடந்த நேரத்தில் ஒரு எஸ்.ஐ., 2 கான்ஸ்டபிள் இருந்துள்ளனர். அவர்களை கடந்து கார் செல்ல முடியவில்லை. இறங்கி ஓடியிருக்கலாம். தப்பி ஓடும்போது சிலிண்டர் விபத்து நடந்திருக்கும்,'' என்று கூறினார்.

எனினும், கார் வெடித்துச் சிதறிய சம்பவத்தில் நிலவும் சந்தேக கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டிய அவசியம் போலீசுக்கு ஏற்பட்டுள்ளது.
* 'காரில் வந்த ஜமேஷா முபீன், திடீரென இறங்கி தப்பி ஓடினார்' எனில், காருக்குள் இருந்த சிலிண்டர்களை வெடிக்க வைத்தது யார்?
* தப்பியோடியபோது வெடித்திருந்தால் சம்பவ இடத்திலேயே பலத்த தீக்காயங்களுடன் அந்நபர் பலியானது எப்படி?

* ஜமேஷா முபீன் தப்பியோடும்போது, அவருடன் வந்திருந்த வேறு நபர்கள் காஸ் சிலிண்டர்களை தொலைவில் இருந்தவாறு வெடிக்கச் செய்துவிட்டு தப்பிவிட்டார்களா?
* நடந்த சம்பவத்தை வைத்துப்பார்க்கும்போது 'தற்கொலை தாக்குதலாகவும்' இருக்க வாய்ப்புள்ளதாக சிலர் அஞ்சுகின்றனர். ஆனால் அவ்வாறில்லை என, போலீஸ் தரப்பில் உடனடியாக மறுக்கப்பட்டது. இந்த முடிவுக்கு போலீசார் உடனடியாக வர ஏதுவான வலுவான ஆதாரங்கள் ஏதும் கிடைத்துள்ளனவா?
* கார் வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இருந்த நபர்கள் யார், எந்த அமைப்பினர்?
No comments:
Post a Comment