Saturday, October 22, 2022

25ம் தேதி சூரிய கிரகணம்; கோவில்களில் தரிசனம் ரத்து.

 காஞ்சிபுரத்தில் தீபாவளிக்கு மறுநாள் வரும் 25ம் தேதி நோன்பு அனுசரிக்கப்படுவது வழக்கம். அன்றைய தினம் சூரிய கிரகணம் இருப்பதால் காமாட்சி அம்மன் கோவில், ஏகாம்பர நாதர் கோவில், குமரகோட்டம் முருகன் கோவில், கச்சபேஸ்வரர் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் மதியம் 12 மணியில் இருந்து நடை சாத்தப்படுகிறது.


கிரகணம் மாலை, 5:00 மணி முதல் 6:20 வரை இருக்கிறது. பின் கோவில்களில் அதற்கான பூஜைகள் முடிந்த பின் பக்தர்கள் வழக்கமான தரிசனம் நடைபெறும். இதனால் இரவு, 7:00 மணிக்கு பொது மக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என காமாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் தெரிவிக்கிறது.

 25ம் தேதி சூரிய கிரகணம்; கோவில்களில் தரிசனம் ரத்து


காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் 25ம் காலை 6:00 - 7:30 மணிக்குள் கந்த சஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று காலையில் இருந்து பக்தர்கள் கோவில் பிரகாரத்தை சுற்றி வருவர்.

சூரிய கிரகணத்தை முன்னிட்டு அன்று காலை, 10:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


நடையடைப்பு



காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடியில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், குருகோவில் என அழைக்கப்படும் கைலாசநாதர் சமேத தட்சிணாமூர்த்தி கோவில் உள்ளது.

இங்கு நாளை மறுநாள் சூரிய கிரகணம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு பகல் 1:30 மணி முதல் மாலை 5:00மணி வரையில், கோவில் நடை சார்த்தப்படும். பரிஹார பூஜைகளுக்கு பின் கோவில் திறக்கப்படும்.

அமாவாசை நோம்பு செய்பவர்கள் நாளை முதல் நாளை மறுநாள் பகல் 1:30 மணிக்குள் எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...