Monday, October 17, 2022

நாகேஷ் மாதிரி புலம்புவது கேவலம்!

 'முடி சுமக்கும் மன்னன் நிம்மதியை இழக்கிறான்' என்கிறார், ஆங்கில மேதை ஷேக்ஸ்பியர். அது எத்தனை உண்மை என்பது, முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் பேசியதில் இருந்து புரிந்தது.


அமைச்சர்கள் புண்ணியத்தில், அவர் துாக்கத்தை இழந்து கஷ்டப்படுவது தெரிகிறது. சந்தேகம் என்னவென்றால், இவரது தந்தை கருணாநிதி காலத்தில், அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மூத்த அமைச்சர்கள் பலர், இவரது அமைச்சரவையிலும் இடம் பெற்றுள்ளனர்.

அன்று கருணாநிதி காலத்தில் அடக்கி வாசித்த துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி, பொன்முடி, கே.என்.நேரு, ஆ.ராஜா போன்றவர்கள், இப்போது, வாய்க்கு வந்ததை பேசுகின்றனர் என்றால், அதிலுள்ள சூட்சுமத்தை ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, நாம் பார்த்து வளர்ந்தவர் தானே என்று எண்ணுகின்றனரா அல்லது கூட இருந்தே குழி பறிக்கும் சகுனித்தனமா என்பதை ஆராய வேண்டும்; அதற்கேற்ற வகையில் செயல்பட வேண்டும். இல்லையெனில், கேலி, கிண்டலுக்கு ஆளாக நேரிடும்.

தவமாய் தவமிருந்து, வாராது வந்த மாமணியாய், ௧௦ ஆண்டுகளுக்கு பின் கிடைத்துள்ள, இந்தப் பதவியின் வாயிலாக, உங்கள் சாதனைகளை தான் மாநிலமே எதிர்பார்க்கிறது. அதை விடுத்து, 'அய்யோ... அம்மா... என்னால முடியல, துாங்கக்கூட நேரம் இல்லை' என்று புலம்பிக் கொண்டிருந்தால், 'அப்ப போய் ஓய்வெடுங்க' என்று, வீட்டிற்கு அனுப்பி விடுவர் மக்கள்.


latest tamil news



வயதான காலத்திலும், கருணாநிதி ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டும் தான் உறங்குவார் என்பது செவி வழிச் செய்தி. அரசியல், இலக்கியம், சினிமா, கலை, படிப்பு, எழுத்து என்று அஷ்டாவதானியாக திகழ்ந்தார். அவர் ஒரு நாளும், இதுபோல புலம்பி பார்த்ததில்லை. நீங்கள் படும் வேதனைக்கு எது, யார் காரணம் என கண்டுபிடித்து, அதற்கு தீர்வு காணுங்கள்.

அதை விடுத்து, ஒரு பெரிய பதவியில் இருப்பவர், அழாத குறையாக இப்படி திருவிளையாடல் நாகேஷ் மாதிரி புலம்புவது கேவலம்; அதுவும், பொது மேடையில் புலம்பித் தீர்ப்பது மஹா கேவலம். வெளியில் தெரியாத அளவுக்கு பிரச்னைகளை முடிப்பதே ராஜதந்திரம்.

ஸ்டாலின் அவர்களே... உங்களுக்கு துாக்கம் வராமல் இருப்பதற்கு, கழுத்துக்கு மேலே உள்ள பணம், அதைக் காப்பாற்ற வேண்டிய கடமை, எந்தெந்த நாட்டில் எப்படி முதலீடு செய்யலாம் என்ற சிந்தனை, வீட்டில் ஆன்மிக வேடம், வெளியில் நாத்திக கோஷம் என்ற இரட்டை நிலைப்பாடு, போலி மதசார்பின்மை கோட்பாடு... இத்யாதி... இத்யாதி... வேறு பல காரணங்களும் இருக்கலாம். அது, உங்களுக்கே தெரியும்.

துாக்கம் என்பது கவலைகளை மறப்பதற்கு இறைவன் கொடுத்த வரம்; அது வரவில்லை என்றால், மன வீணையில் எழும் அபசுரம். நீரில் துவங்கி நெருப்பில் முடியும் வாழ்க்கையே, மரணம் எனும் நெடுந்துயிலில் தானே முற்றுப் பெறுகிறது. புரிந்து கொள்ளுங்கள்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...