Wednesday, October 12, 2022

12 மா.செ.,க்களுக்கு வைத்திலிங்கம் துாது :கே.பி.முனுசாமியிடம் சசிகலா சமரச பேச்சு.

 அ.தி.மு.க.,வில் 12 மாவட்டச் செயலர்களை, பன்னீர்செல்வம் அணிக்கு இழுக்க, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் துாது அனுப்பிள்ளார். 'பிரிந்தவர்கள் ஒருங்கிணைய குரல் கொடுக்க முன்வர வேண்டும்' என, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியிடம், சசிகலா ரகசிய பேச்சு நடத்தி உள்ளார்.



51வது ஆண்டு விழா



இது குறித்து, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:அ.தி.மு.க.,வின், 51வது ஆண்டு துவக்க விழாவை கொண்டாடுவது குறித்து, சமீபத்தில் இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.அதில், துணை பொதுச்செயலர் கே.பி.முனுசாமி பங்கேற்கவில்லை. உடல் நலக் குறைவு என காரணம் சொல்லப்பட்டது.

12 மாசெ க்கள், வைத்திலிங்கம், முனுசாமி,சசிகலா , சமரசம்


ஆனால், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க டில்லி சென்றபோது, பழனிசாமி தன்னை அழைத்து செல்லவில்லை என்ற அதிருப்தி தான் காரணம் என கூறப்படுகிறது. இதையறிந்த சசிகலா, முனுசாமியை தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்துள்ளார். அவர் விரும்பினால் நேரில் சந்திக்க வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரும் ஒன்றிணைவதற்கு குரல் கொடுக்க முன்வர வேண்டும் என்றும் முனுசாமியிடம், சசிகலா வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
ஆனால், முனுசாமி தரப்பில், எந்த சாதகமான பதிலும் தெரிவிக்கப்படவில்லை.அதேபோல், அ.தி.மு.க., மாவட்டச் செயலர்களில், தி.மு.க., அனுதாபியாக உள்ள 13 பேரிடம், பன்னீர்செல்வம் அணி சார்பில் பேச, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் துாது அனுப்பியுள்ளார்.


பன்னீர் தரப்பில் வலை



அந்த மாவட்டச் செயலர்களில் சிலர், தி.மு.க., புள்ளிகளுடன் இணைந்து, ஆந்திராவில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாக தெரிகிறது. தி.மு.க.,வுக்கு தாவலாமா என்ற சிந்தனையில் உள்ள, அந்த மாவட்டச் செயலர்களுக்கு, பன்னீர் தரப்பில் வலை வீசப்பட்டுள்ளது.
இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனின் ஆலோசனைப்படி, சசிகலா செயல்பட துவங்கி உள்ளார். முன்னாள் அமைச்சர்களிடம் சசிகலா தொடர்பு கொண்டு வருகிறார். கடலுாரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் பெண் அமைச்சர் ஒருவர், காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் எம்.எல்.ஏ., ஆகியோர், சசிகலா தொடர்பு கொண்டோர் பட்டியலில் உள்ளனர்.


'வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க, ஆட்சி அமைந்து, நீங்கள் அமைச்சர்களாக வேண்டும் என்றால், பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்த வேண்டும்' என,சசிகலா கூறியுள்ளார். ஆனால், சசிகலாவுக்கு சாதகமாக யாரும் பதில் சொல்லவில்லை என தெரிகிறது.இவ்வாறு கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...