Monday, October 17, 2022

மன்னிப்பாயா....

 “ரவி என்னடா? இன்னிக்கு லீவா? படுத்திண்டு இருக்கே”

“ஆமாம் லீவு தான்”
“டிபன் சாப்பிடறயா?”
“இல்லேம்மா! நான் வெளில சாபிட்டுக்கறேன் . இப்போ கிளம்பிடுவேன்”
“லீவுன்னு சொன்னயே!”
“அம்மா அட்வகேட் வரச் சொல்லியிருக்கார்”
லலிதா கவலை ததும்ப மகனைப் பார்த்தாள்.
“கண்ணா ரவி! அம்மா சொல்லறதைக் கொஞ்சம் கேளுடா”
அம்மாவைப் பார்த்தான்.
“ நானும் கல்யாணம் ஆன புதுசுல உன்னோட அப்பாகிட்டே
தனிக் குடித்தனம் போகணும்னு சண்டை போட்டுக்கிட்டுதான் இருந்தேன் . ஆனா உன்னோட அப்பா பிடிவாதமா மறுத்திட்டா.. நான் முழுக்க முழுக்க உன் அப்பா கையை எதிர்பார்க்க வேண்டி இருந்ததால வேற ஒண்ணும் என்னால பண்ண முடியலை. ரம்யா படிச்ச பொண்ணு. அவளும் கை நிறைய சம்பாதிக்கறா.. அவளும் நீயும் தனியா வாழணும்னு நினைக்கறா.. விட்டுக் கொடுத்து போகறது தப்பில்லைடா..
அதனால நீ எங்களை விட்டு போய்விட்டாய்னு நினைக்க மாட்டோம் எதுக்கு கோர்ட் கேஸேனு வேண்டாம்டா “
“அம்மா நானா கேஸ் போட்டேன்? அவதானே! அவளுக்கு தெரியும்தானே நாம எல்லாம் ஒண்ணா இருப்போம்னு... இப்ப தனியா போய் என்ன செய்யப் போறோம்? நீங்க எத்தனை நல்லவங்க. எந்த வம்பு தும்புக்கும் போகறது இல்லை. நான் ஒரே பிள்ளை அப்புறம் என்ன? அப்படி அப்பா, அம்மா, அண்ணா, அக்கா, தம்பி யாரும் வேண்டாம்னு சொல்லறவங்க அனாதை ஆஸ்ரமத்தில் வளர்ந்த பையனை கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே! தனியே இருக்கணும்னு நினைக்கறா! தனியாவே இருக்கட்டும்”
“டேய் அப்ப நீயும் தானேடா தனியா இருக்கணும்?”
“பரவாயில்லைமா இப்படியே இருந்துக்கறேன்”
அவன் கிளம்பிப் போனதும்,
“ என்ன லலிதா நீ உன்னைப்பத்தி தப்பா பையன் கிட்ட சொன்னே “
“அதனால என்னங்க அவங்க ரெண்டு பேரும் ஒத்துமையா இருந்துகட்டும் அது போதும்”
அடுத்த நாள் ரவி வேலையில் மும்மரமாக இருந்தபோது அவனைப் பார்க்க ஒருவர் வந்து காத்துக் கொண்டிருப்பதாக சொல்ல ரவி வெளியில் வந்தான். மாமனார் நின்று கொண்டிருந்தார்.
“வாங்க மாமா! காபி சாப்பிட்டு விட்டு வரலாம்”
கஸ்தூரி பவன் சென்றார்கள் .
“ரெண்டு காபி ஒண்ணு சுகர் இல்லாமல்... ஆர்டர் பண்ணி அவரை நிமிர்ந்து பார்த்தான்
“சொல்லுங்க மாமா”
“ரவி உங்ககிட்ட என்ன சொல்லறதுனு தெரியலை! எப்படியோ உங்ககிட்ட பேசணும்னு வந்திட்டேன் .ஆனா ஆரம்பிக்க தயக்கமா இருக்கு “
“என்ன மாமா! எதுவானாலும் சொல்லுங்க”
“நீங்க கேக்கலாம் உங்க பொண்ணுகிட்ட பேசவேண்டியதுதானேனு அவ நாங்க சொல்லறதை கேக்க மாட்டேங்கறா.. அதனால உங்ககிட்ட பேச வந்திருக்கேன்”
“சொல்லுங்க மாமா”
:நீங்க கொஞ்சம் விட்டுக் கொடுத்து போங்கன்னு கேக்க வந்தேன் அவ பண்ணறது கொஞ்சமும் சரியில்லைனு தெரிந்தாலும் அவ வாழ்க்கையை நினைச்சா கவலையா இருக்கு”
“நான் இப்ப என்ன செய்யணும்னு நினைக்கறீங்க அம்மா அப்பாவை அப்படியே விட்டுட்டு நாங்க ரெண்டுபேரும் தனி குடித்தனம் ஆரம்பிக்கறதா”
“ரவி கொஞ்ச நாளைக்கு... நாளைக்கே குழந்தை பிறந்தா பாத்துக்க ஆள் வேணும்னு சேர்ந்துக்கப் போறா”
“அப்படிபட்டவ அவ இல்லை மாமா.. பேபி சிட்டிங் பண்ணிடுவா . உங்க கவலை எனக்கு தெரியுது. எங்க வீட்டிலும் கவலை படறாங்க. வேற ஏதாவது யோசிப்போம்”
“என்னது? நீங்க எங்க கிளம்பறீங்க?”
“ரம்யா நாங்க எங்கேயோ போறோம். நீ உன் இஷ்டப்படி உன்னோட முடிவை சொல்லிட்டே. உன்னை இப்படி பாக்க பிடிக்கலை. உன்னோட அப்பாவுக்கு பென்ஷன் வருதே நாங்க எங்கயாவது இருப்போம். எங்களுக்கு தோணும்போது உன் கிட்ட பேசறோம். நாங்க இங்க இருக்கறதும் ஒருநாளைக்கு உனக்கு இடைஞ்சலா தெரியும்”
நின்றுகொண்டிருந்த ஆட்டோவில் ஏறி போய் விட்டனர்
ரம்யா திகைத்துப் போனாள்.
அடுத்தநாள் அவளே எழுந்து காபி போட்டு குடித்து, எதுவோ டிபன் சாப்பிட்டு கிளம்பினாள்.
அம்மா அப்பாவிடம் இருந்து போனே இல்லை அவள் கூப்பிட்டாலும் எடுக்கவில்லை.
ஒரு வாரம் கழித்து கூப்பிடுகிறேன் என்று சொன்னார்களே அவர்கள் கூப்பிடுவார்கள் என்று காத்து இருந்தாள். அவர்கள் கூப்பிடவே இல்லை. இவள் கூப்பிட்டாலும் போன் எடுக்கவில்லை. ரொம்ப கவலையை அடைந்தாள்.
ரவியை கூப்பிட்டபோது சாயங்காலம் வீட்டிற்கு வரச் சொன்னான். .மாலை கவலையோடு காலிங் பெல் அடித்தாள். லலிதா வந்து கதவை திறந்தாள்.
“ வாம்மா!”
கொஞ்சம் தயக்கமாக உள்ளே வந்தாள்.
“உன்னோட வீடுமா.. எதுக்கு தயங்கறே”
“ரவி வரலையா ?
“ பக்கத்துக்கு கடைக்கு போயிருக்கான். வந்துடுவான்”
என்ன பேசுவது என்று அவளுக்கு தெரியவில்லை.
லலிதா காபி கொடுத்தாள் குடித்துக் கொண்டிருந்தபோது ரவி வந்தான். அவனைப் பார்த்ததும் கண்ணீர் கொப்பளித்து வந்தது. ஓடிப் போய் அவனைக் கட்டிப் பிடித்து அழுதாள்.
ரவி அவளை ஆறுதலாக தடவிக் கொடுத்தான் .
“ரவி... ரவி... என்னை மன்னிச்சுடுங்க! தனிமை எப்படினு நான் அனுபவிச்சுட்டேன்! அம்மா என்னை மன்னிச்சுடுங்க!”
லலிதாவின் காலில் விழப்போனாள். லலிதா அவளை தடுத்து சோபாவில் உட்கார வைத்தாள்.
“என்னோட அம்மா அப்பா எங்க போனாங்க? என்னாச்சுன்னு எதுவும் தெரியலை. இப்ப ஒருவராம ஸ்விட்ச்ஆஃ னு வருது. ரவி எனக்கு என்னோட அம்மா அப்பா வேணும்.. நான் என்னோட தப்பை புரிஞ்சுக்கிட்டேன்”
அதற்கு மேல் அவளை அவன் அழ விடவில்லை .
அவளை அணைத்துக் கொண்டு அவனது படுக்கை அறை கதவைத் திறந்தான்.
அங்கிருந்த சோபாவில் அவளது அம்மாவும் அப்பாவும் உட்கார்ந்து இருந்தனர்.
ஒரு மாதமாக ரவி வீட்டில்தான் இருப்பதாகத் தெரிவித்தனர்.
May be an illustration of 1 person

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...