Thursday, October 20, 2022

ஜெயலலிதா வீட்டில் நடந்தது என்ன?

 அப்பல்லோ மருத்துவ மனையில், ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட, 2016 செப்., 22 அன்று, அவரது போயஸ் கார்டன் வீட்டில் நடந்தது என்ன என்பது குறித்து, சசிகலா தன் பிரமாண வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:

Jayalalitha, Sasikala, Apollo Hospital, ஜெயலலிதா, சசிகலா, போயஸ் கார்டன், அப்பல்லோ மருத்துவ மனை, டாக்டர் சிவகுமார், Boyce Garden, Doctor Sivakumar,


அன்று மாலையில் இருந்து, ஜெயலலிதா மிகவும் சோர்வாக இருந்தார். அதனால் நான் மிகவும் கலக்கம் அடைந்தேன். மருத்துவமனைக்கு போகலாம் என கட்டாயப்படுத்தினேன்.


உரத்த குரல்



அவர் 'துாங்கினால் சரியாகி விடுவேன்; மருத்துவமனைக்கு போனால் 'அட்மிட்' ஆக சொல்வர். அதெல்லாம் வேண்டியதில்லை' என, என்னிடம் கோபமாகக் கூறினார்.

சிறிது நேரத்தில் காய்ச்சல் குறைந்தது. இரவு 9:30 மணிக்கு அவருடன் முதல் தளத்தில் இருந்தேன். அவர் படுப்பதற்கு முன் பல் துலக்க, குளியல் அறைக்குச் சென்றார். அங்கிருந்தபடியே, 'சசி மயக்கமாக இருக்கிறது; இங்கே வா' என்றார்.

நான் உடனே அவரை அழைத்து வந்து கட்டிலில் உட்கார வைத்தேன். நானும் அருகில் உட்கார்ந்தேன். அவர் மயங்கிய நிலையில், என் தோளில் சாய்ந்தார்.

அப்போது, டாக்டர் சிவகுமார் வந்தார். நான் பதற்றத்துடன், அழைப்பு மணியை அழுத்தி, 'உதவிக்கு யாராவது வாங்க...' என உரத்த குரலில் சத்தமிட்டேன்.

ஜெயலலிதாவின் தனி பாதுகாவல் அதிகாரிகள், கார் டிரைவர், பணியாட்கள் வந்தனர். டாக்டர் சிவகுமார், அப்பல்லோ மருத்துவமனையை தொடர்பு கொண்டார்.


சிறப்பு மருத்துவர்கள்



சிறிது நேரத்தில் இரண்டு அப்பல்லோ மருத்துவமனை ஆம்புலன்ஸ்கள் வந்தன. ஜெயலலிதாவை 'ஸ்ட்ரெச்சரில்' படுக்க வைத்து, முதல் தளத்தில் இருந்து துாக்கி வந்து, ஆம்புலன்சில் ஏற்றினோம். இரவு 10:20 மணிக்கு, மருத்துவமனை சென்றோம்.

கிரீம்ஸ் சாலையில் திரும்பியபோது, அவர் கண் விழித்து, 'எங்கிருக்கிறேன்?' எனக் கேட்டார். மருத்துவமனை செல்வதாக கூறினேன். மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். சிறிது நேரத்தில் அவர் மயக்கம் தெளிந்து, சகஜ நிலைக்கு திரும்பினார். இவ்வாறு சசிகலா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...