Monday, October 24, 2022

புரட்சித் தலைவர் பட்டம் ஸ்டாலினுக்கு சரிவராது!

 'தி.மு.க., தலைவராக இரண்டாவது முறையாக போட்டியின்றி தேர்வாகியுள்ள ஸ்டாலின் தான், உண்மையில் புரட்சித் தலைவர்' என, நன்றாக ஜால்ரா தட்டியிருக்கிறார், நிதி அமைச்சர் தியாகராஜன்.


எம்.ஜி.ஆருக்கு, 'புரட்சி நடிகர்' என்ற பட்டத்தைக் கொடுத்து பெருமைப் படுத்தியவர் கருணாநிதி. சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், ரஜினிகாந்த் போன்றோர் கூட, சில படங்களில் வில்லனாக நடித்திருக்கின்றனர். எம்.ஜி.ஆர்., மட்டுமே, கடைசி வரை ஹீரோவாக நடித்து புரட்சி செய்தவர்.

அ.தி.மு.க., கட்சியை துவங்கி, தமிழகத்திலும், புதுச்சேரியிலும், ஒரே சமயத்தில் ஆட்சியை பிடித்து, பெரும் புரட்சி செய்தவரும் அவரே.

இதன் பிறகே, புரட்சி நடிகராக இருந்த எம்.ஜி.ஆர்., தன் கட்சித் தொண்டர்களால், புரட்சித் தலைவர் என்று அழைக்கப்பட்டார்.

அண்ணாதுரை தி.மு.க.,வை துவங்கியவுடனே ஆட்சிக்கு வரவில்லை. ஆனால், எம்.ஜி.ஆர்., - அ.தி.மு.க.,வை துவங்கிய கொஞ்ச நாளிலேயே, திண்டுக்கல் லோக்சபா தொகுதி தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று அசத்தினார்.

'படுத்துக் கொண்டே ஜெயிப்போம்' என்று சொன்ன தலைவரான காமராஜர், 1967ல் நடந்த சட்டசபை தேர்தலில், விருதுநகர் தொகுதியில், ஒரு மாணவனிடம் படுதோல்வி அடைந்தார்.

எம்.ஜி.ஆரோ, வில்லன் நடிகர் எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டு, ஆஸ்பத்திரியில் இருந்த போதும், அப்போதைய பரங்கிமலை தொகுதியில் மாபெரும் வெற்றி பெற்று, சரித்திர சாதனை படைத்தார். இதன் பின், அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற போதும், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தார்.

எம்.ஜி.ஆர்., உயிரோடு இருந்த வரை, கருணாநிதியால் ஆட்சிக்கு வரவே முடியவில்லை. பெண்களின் மகத்தான ஆதரவு எப்போதும், எம்.ஜி.ஆருக்கு இருந்தது. சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி, எம்.ஜி.ஆர்., செய்த புரட்சிகள் ஏராளம். எனவே, புரட்சித் தலைவர் என அழைக்கப்படும் தகுதி, எம்.ஜி.ஆருக்கு மட்டுமே உண்டு.

கட்சியினரை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியாமல், இரவு முழுதும் துாங்க முடியாமல் தவிக்கும் ஸ்டாலினை, புரட்சி தலைவர் என்று அழைத்தால், புரட்சி என்ற வார்த்தைக்கே அர்த்தம் இல்லாமல் போய் விடும். புரட்சித் தலைவர் பட்டம் ஸ்டாலினுக்கு எல்லாம் சரிவராது.

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் மிகச் சிலர் மட்டுமே. அப்படி தமிழக மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்எம்.ஜி.ஆர்., என்றால், அது மிகையாகாது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...