Sunday, October 16, 2022

*திருவேங்கட மாமலை!*

 வைகுண்டத்திலிருந்து மஹாவிஷ்ணு, திருவேங்கடவராக பூலோகத்தில் எழுந்தருளியபோது, அவர் வர்த்திக்கிற தேசமாக, ஒரு மலையையே கருடாழ்வார் தாங்கி வந்தாராம். *அந்த வைகுண்ட மலையே திருமலை!*

மேலும், திருமலை இருக்கும் நல்கொண்டா மலைத்தொடர் திருமலை எம்பெருமானின் திருமுடியாகவும், அங்கிருந்து அஹோபிலம் வரை நீண்டிருக்கும் மலை பெருமானின் திருமேனியாகவும்,
பத்ராச்சலம் அவருடைய திருவடியாகவும் போற்றப்படுகிறது!
"உலகம் உண்ட பெருவாயா! உலப்பில் கீர்த்தி அம்மானே*
நிலவும் சுடர் சூழ் ஓளி மூர்த்தி! நெடியாய்! அடியேன் ஆருயிரே*
திலதம் உலகுக்காய் நின்ற*
திருவேங்கடத்து எம்பெருமானே!
குலதொல் அடியேன் உன் பாதம்* கூடும் ஆறு கூறாயே!
-ஸ்வாமி நம்மாழ்வார் (திருவாய்மொழி)
*(ப்ரளய காலத்தில், இந்த உலகங்கள் அனைத்தையும் பாதுகாத்தருளும் பொருட்டு உண்ட எம்பெருமான் ஶ்ரீமந் நாராயணனே!*
*எல்லையற்ற பெரும்புகழ் கொண்ட அம்மானே!*
*ஒளி வடிவு பெற்ற எம்பெருமான் திருமாலே! ஆதிமூர்த்தி!* *
*அடியேனின் ஆன்மாவாகத் திகழ்கின்ற எம்பெருமானே!*
*உலகம் அனைத்திற்கும் திலகம் போன்று வணங்கக்கூடிய திருவேங்கட மலையில் நின்றருளும் எம்பெருமான் திருவேங்கடவா!*
*தொண்டு குலத்தில் தோன்றிய அடியேன், உன்னுடைய திருவடிகளை அடைய அனுக்ரஹிக்க வேணும்*) 🙏
May be an image of sky

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...