Thursday, October 20, 2022

கமிட்டியிலிருந்துஆய்வறிக்கை வழங்க.

 திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் குணசேலத்தைச் சேர்ந்த அரங்கநாதன் மகன் பிச்சுமணி ஐயங்கார். இவர் பிரசித்தி பெற்ற குணசீலம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் திருக்கோவிலில் பரம்பரை நிர்வாகியாக இருந்து வருகிறார். இந்த கோவிலுக்கு திருப்பணி வேலைகள் நடந்து 12 ஆண்டுகளுக்கு மேலானதால் தற்போது உபயோதாரர்கள் மூலமாக திருப்பணி நடத்த உத்தேசித்துள்ளார்கள் அதனால் அது சம்பந்தமாக முறையான அனுமதியை இந்து அறநிலையத்துறையில் பெற்றுள்ளார்கள்.அதற்கு நியமிக்கப்பட்ட State level expert committee என்ற கமிட்டியில் ஆய்வறிக்கை பெறவேண்டிய நிலையில் இருந்துள்ளது. அது சம்பந்தமாக மேற்படி கமிட்டியினர் கடந்த 2.6.2022 அன்று மேற்படி கோவிலில் ஆய்வு செய்துள்ளனர். அதற்குப் பிறகும் ஆய்வு அறிக்கை கோவில் நிர்வாகத்திற்கு கிடைக்கப்பெறாதால் நிர்வாகத்தினர் மேற்படி கமிட்டியினரைதொடர்பு கொண்டுள்ளனர். அதற்குப் பிறகு கமிட்டியின் உறுப்பினரான தொல்லியல் துறை வல்லுனரான திருமதி மூர்த்தீஸ்வரி என்பவர் கடந்த 12 10 2022 அன்று மீண்டும் திருக்கோவிலுக்கு வந்து மேற்படி டிரஸ்டியை சந்தித்து 10 லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் கமிட்டியிலிருந்துஆய்வறிக்கை வழங்க இயலும் என்று தெரிவித்துள்ளார். அதற்கு பிச்சுமணி ஐயங்கார் பத்து லட்ச ரூபாய் அதிகமாக உள்ளதாகவும் இதனை உபயதாரர்களிடம் கேட்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.அதற்கு மூர்த்தீஸ்வரி, ஐந்து லட்ச ரூபாய் குறைத்துக் கொண்டு அஞ்சு லட்ச ரூபாய் கொடுத்தால் தான் ஆய்வறிக்கை வழங்க முடியும் என்றும் முன்பணமாக ஒரு லட்ச ரூபாய் கொடுக்குமாறும் பிச்சுமணி ஐயங்காரிடம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத பிச்சுமணி ஐயங்கார் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி திரு மணிகண்டன் அவர்களிடம் அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை அளித்த ஆலோசனையின் பேரில் பிச்சுமணி ஐயங்கார் மூர்த்தீஸ்வரி இடம் ஒரு லட்சம் ரூபாய் முன்பணத்தை கொடுக்கும் போது கையும் களவுமாக பிடிபட்டார்.

May be an image of 1 person, sitting and indoor

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...