Wednesday, June 7, 2023

100% true. அறியாமல் செய்த நல்ல காரியம்.

 நாசா, மைக்ரோஸாஃப்ட் போன்ற பல பண்ணாட்டு நிறுவனங்களில் இன்று தமிழர்கள் பலர் பணிபுரிய கலைஞர்தான் காரணம் என்று வைரமுத்து பேசியிருக்கிறார் -

முதன்முறையாக, வைரமுத்துவின் கருத்தோடு நான் உடன்படுகிறேன், ஆம். Google CEO சுந்தர்பிச்சை மட்டுமல்ல இன்னும் பல தமிழர்கள் குறிப்பாக பிராமணர்கள் இன்று உலகின் பலபகுதிகளில் பல நிறுவனங்களின் தலைமைப் பதவிகளிலும், பல்வேறு வேலைகளிலும் இருப்பதற்குக் கலைஞர்தான் காரணம். அதிலும்கூட அமெரிக்காவில் அதிக அளவிலான பிராமணர்கள் வாழ்வதற்கும், இன்று அமெரிக்க துணை அதிபராகக்கூட ஒரு தமிழர், ஒரு பிராமணர் அமர்ந்ததற்கும் கூட கலைஞர்தான் காரணம் -
ஆம், இடஒதுக்கீடு என்ற பெயரில் இவர்களுக்கு மறுக்கப்பட்ட இடங்களை அடைய அவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருந்தது, அதிகமாகப் படிக்க வேண்டியிருந்தது. மற்றவர்கள் 50 மதிப்பெண்களுக்குப் படித்தால், இவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் 100% மார்க்குகளுக்காகப் படிக்க வேண்டியிருந்தது அதனால் அட்டை டூ அட்டை கடுமையாகப் படித்தார்கள், விளைவு தேவையான அறிவு பெற்றனர். அரசு நிறுவனங்களில் போராடி 31% பொதுப் பிரிவில் பலர் இடம்பெற்றனர். தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீடு இல்லாத காரணத்தால், திறமைக்கு மதிப்பளிக்கும் காரணத்தால் அதிகமான அளவு இவர்கள் வேலைவாய்ப்புப் பெற்றார்கள், பல நிறுவனங்களின் தலைமைப் பதவிகளுக்கும் வந்து அமர்ந்திருக்கிறார்கள் -
ஆக, ஒரு காலத்தில் கடல்கடந்து போவதையே பாபம் என நினைத்த ஒரு சமூகத்தை கடல்கடந்து பல நாடுகளில் இன்று வசதியாக வாழ வழி செய்ததது. திராவிட இயக்கங்களும் பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் என்றால் அது மிகையாகாது -
ஆக, ஆக, வைரமுத்து கூறிய கருத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன் -
கலைஞர் வாழ்க -
தேசப்பணியில் என்றும்-
May be an image of 2 people and text that says 'மைக்ரசாஃப்ட் போன்ற நிறுவனங்களில் இந்தியர்கள் பணி புரிய கலைஞர் தான் காரணம்#வைரமுத்து... இது என்ன பிரமாதம் ஆர்ம்ஸ்ட்ரங் நிலாவில் கால் வைக்கவே அவர் தான் காரணம்.. அவர் மட்டும் இல்லைனா. பார்த்து பக்குவமா ஊதுங்க கோபால்'
All reactio

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...