Sunday, June 11, 2023

மனதாற வேண்டுவதே போதும்.

 கோவிலில் தேங்காய், பழம் எல்லாம் அநியாய விலை வைத்து விற்கிறார்கள்.

மன நிம்மதிக்காகத்தான் கோயிலுக்குச் செல்கிறோம். ஆனால் நிம்மதியாக சாமியைக் கும்பிட முடியவில்லை. கோயில் வளாகத்தில் செருப்பு விடுவது முதற்கொண்டு, உள்ளே நெய் விளக்கு விலை அதிகம், பூமாலை விலை அதிகம்,கூட்டம் அதிகம், ஸ்வாமியை சரியாக தரிசனம் செய்ய முடியவில்லை என்று கூப்பாடு போட்டுக்கொண்டு, சாதாரண பக்தன் ஒருவன் கோயிலுக்குச் சென்று நிம்மதியாக சாமி கூட கும்பிடாத நிலைமைதான் இருக்கிறது.
ஆனால் உண்மையில் இவை உண்மையா என்றால் இல்லை என்றே கூற வேண்டும். நாம் எதற்காகக் கோயிலுக்குப் போகின்றோம். இறைவனை நினைத்து , சிலை ரூபத்தில் இருக்கும் இறைவனிடம் நம் நம்பிக்கைகளை செலுத்தி எண்ணங்களில் செழுமைப்படுத்திக் கொள்ளவே செல்கிறோம். இதில் நாம் மலர் வாங்கிக் கொண்டு செல்வதும், வாங்காமல் செல்வதும்,
நெய் விளக்கு ஏற்றுவதும், ஏற்றாமல் இருப்பதும் அனைத்தும் நம் விருப்பம்தான்.
பணம் இருப்பவர் தங்கத் தேர் இழுக்கிறேன் என்று வேண்டிக் கொள்கிறார். அவரைப் பார்த்து நீயும் ஏன் அந்த வேண்டுதலைச் செய்கிறாய்? கடவுள் என்ன பண்டமாற்று வியாபாரியா? கடன் வாங்கியாவது பகட்டாக நீ செய்தால்தான் ஏற்றுக் கொள்வேன் என்று எப்பொழுது கூறியுள்ளார்? கடவுள் எளிமையானவர். அவருக்கு மனதாரச் செய்வதுதான் முக்கியமே ஒழிய பணக்காரத்தனமாய்ச் செய்வது அல்ல. உங்களால் இயன்றதை இயலாதவர்களுக்கு ச் செய்யுங்கள். ஒன்றுமே முடியவில்லையா வெறும் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு வாருங்கள். கோயிலுக்கே செல்லாமல் இருந்த இடத்திலிருந்தே வணங்கினாலும் கடவுள் ஏற்றுக் கொள்வார். நாம் நம்மை அந்த அளவிற்கான பக்குவத்திற்கு உயர்த்திக் கொள்வது நம் கையில்தான் இருக்கிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...