இதற்குத்தானே ஆசை பட்டீர் பத்து ரூபாய் பாலாஜியே,
இந்த வயதில் நிஜமாகவே திடீர் கவலையில் நெஞ்சு வலி வரலாம், ஆனால் அது உண்மையாக இருக்க வேண்டாம்,...
ஒரு மனிதன் அதிகபட்சமாக 36,500 நாள் உயிர் வாழலாம்!
அதற்கு ஆயிரக்கணக்கான கோடி பணம் தேவையில்லை பாலாஜி
ஏற்கனவே இதற்கு முன்னுதாரணமாக நிகழ்ந்தது ஜெயாம்மா வழக்கு, அதற்கு வழி வகுத்த நல்லவங்க இருப்பதும் உங்க கட்சியே,
அதோடு அத்தனை ஆயிரம் கோடி சொத்துக்களை விட்டு விட்டு சென்றதா அல்லது பழி வாங்க பட்டதா அந்த அம்மா, இப்போது அந்த சொத்துக்களை கண்ட கண்ட. ... கள் அனுபவித்து வருகிறது.
இதோடு அந்தம்மா இரவும் பகலும் உழைத்து சம்பாதித்த சொத்தும் போயிடுச்சு.
இதெல்லாம் பாடம், நாம் கற்றுக்கொள்ள வேண்டியது.
எத்தனையோ உயிர்கள் மழை வெயிலுக்கு ஒண்டுவதற்குக் கூட நிழல் இல்லாமல் வாடி வதங்கி வாழ்ந்து வரும் சூழலில்,
பார்க்கும் இடமெல்லாம் காசு, பணம், வீடு, நிலம்,
யாரையோ திருப்தி படுத்த அல்லது உமை திருப்தி படுத்த நினைத்து,
அந்த நினைப்பே இன்று எங்கே கொண்டு சென்றது பார்த்தீரா?
சேர்த்து வைத்த பணம் காப்பாற்றியதா உம்மை இன்று,
இதை பழி வாங்கும் நடவடிக்கை என்று சொன்னால், ஏன் தமிழகத்தில் இருக்கும் மத்த அரசியல்வாதிகளுக்கு நிகழவில்லை?
பழம் தின்று கொட்டை போட்ட அரசியல்வாதிகள் நிறைய பேர் உங்க கட்சியிலே இருக்காங்க, அவர்களுக்கும் ஒருநாள் இந்த நிலை வரும்.
மக்கள் வாக்கு அளித்து ஒரு உயரிய இடத்தை அளித்திருக்கிறார்கள், அந்த இடமே சொர்க்கம்,
இதை விட வரிபணத்தை கொள்ளை அடிப்பது கெளரவமா? அல்லது அந்த பணமா சொர்க்கம்?
இன்னும் தண்டனை முடிந்து வெளியே வந்தாலும் பொது வெளியில் தலைநிமிர்ந்து மக்களையோ, ஊடக நிருபர்களையோ பழைய நிலையில் சந்திக்க உமது தன்மானம் இடங்கொடுக்குமா?
அரசியலில் தண்டனை பெற்ற குற்றவாளியை இந்த சமுதாயமும் மதிக்காது,உமது கட்சியுமே மதிக்காது,
காசுக்காக உம்மை சுற்றி 100 பேர் வரலாம்,
ஆனால் உமது குடும்பம் அடையும் அந்த கவலை, வெட்கம் இவற்றிற்கு அளவு உண்டா?
உமது குழந்தைகள் அடையும் மனக்கிலேசத்தை தடுக்க அந்த பணத்தால் முடியுமா?
கொடுத்தவன் கேட்கும் போது இல்லையென்றால் அவன் விடுவானா?????
தீதும் நன்றும் பிறர் தர வாரா.........

No comments:
Post a Comment