பணி ஒய்வு பெற்ற பின்னால் எங்கேனும் ஒரு குக்கிராமம். அதில் ஓரளவு சுமாரான ஓட்டு வீடு வாசலில் திண்ணை. திண்ணையைத் தாண்டி ஒரு வேப்பமரம் உள்ளே போனால் ஒரு ரேழி, அதைத் தாண்டிய பின்னர் கம்பி போட்ட முற்றம், தாழ்வாரம். தாழ்வாரத்தின் பக்க வாட்டில் ஒரே ஒருஅறை, அதையும் தாண்டி பூஜையறை அதையொட்டி சமையலறை.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Tuesday, June 13, 2023
கடலளவு ஆசை.
குக்கிராமத்துக்கு அருகில் ஒரு பத்துப் பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் ஒரு சிறு டவுண் இருக்க வேண்டும். வாரம் ஒரு முறை டவுனுக்கு போய் ஏதேனும் அவசியத் தேவை இருந்தால் வாங்கலாம். "வா சுதர்சனம் என்ன டவுனுக்கு போய்ட்டு வந்தியா?" என்று அடுத்த வீட்டு பெரியவர் விசாரிக்கணும்.
காலை எழுந்து பல்விளக்கியதும் நீராகாரம். அதன் பின்னால் தியானம், உடற்பயிற்சி பின் Tea and செய்தித்தாள். அதை ஒரு பத்தி விடாமல் படித்து முடிக்க வேண்டும். அப்புறம் பழையது, தொட்டுக் கொள்ள வடுமாங்காய், மோர்மிளகாய், அப்புறம் தோட்டத்தில் கொஞ்சம் நேரம் வேலை.
அதன் பின்னால் குளியல் கொஞ்சம் நேரம் பூஜை. முடிந்ததும் ஊரிலுள்ள ஈஸ்வரன் கோவிலுக்கோ, பெருமாள் கோவிலுக்கோ செல்லுதல், வழிபாடு முடித்து விட்டு வந்தால் பதினோரு மணிக்கு சாப்பாடு.
அதன் பின்னால் வாசல் திண்ணையில் ஒத்த வயதுடைய அக்கம் பக்கத்து நம் வயதை ஒத்த நண்பர்களுடன் அரட்டை, சிறிய பேட்டரி ரேடியோவில் செய்தி கேட்டுக் கொண்டே விமர்சனம். சரியான செட்டாக நாலைந்து பேர் சேர்ந்தால் கேரம் போர்டு, காசு வைக்காமல் ரம்மி.
மதியம் இரண்டு மணி நேரம் தூக்கம் மாலை ஒரு காபி கொஞ்சம் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சும் வேலை. அப்புறம் தியானம் பின் கோவிலுக்கு ஆறு மணி பக்கம் அங்கு தரிசனத்துக்கு பின்னால் ஒரு ஏழெட்டு டிக்கெட்டுகள் உட்கார்ந்து பல விஷயங்கள் பற்றி அலசல் ஒரு எட்டு மணி வரை.
பின் வீடு திரும்பி எளிய டிபன் நாலு இட்லி அல்லது இரண்டு சப்பாத்தி கொஞ்சம் பால். ராத்திரி திண்ணையில் பாய் விரித்துக் கொண்டு அக்கம் பக்கம் தோஸ்துகளுடன் இருட்டில் பேசிக் கொண்டே படுக்கை தூக்கம் வரும் போது தூங்கிப் போகுதல். முடிந்தால் வாசலில் உள்ள வேப்பமரத்தின் கீழே கயிற்றுக்கட்டிலில் படுத்து ஜம்மென்று உறக்கம்.
செல்போன் இல்லை, கணினி இல்லை, டிவி இல்லை, பேஸ்புக் இல்லை, வாட்ஸ்அப் இல்லை எதுவுமே இல்லை. உடலில் நோயுமில்லை மனதில் கவலையுமில்லை. வாய்க்குமா???
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...

No comments:
Post a Comment