தமிழக மின்சாரத்துறை மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. இவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்புடன் 5 கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அடையாறு பசுமை வழிச் சாலையில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு, பிஷப் கார்டன் பகுதியில் உள்ள அவரது சகோதரர் தங்கியிருந்த வீடு மற்றும் அலுவலகத்தில் காலையில் சோதனை மேற்கொண்டனர். இந்த நிலையில் தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அறையிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை தலைமை செயலகத்தில் புகுந்து ரெய்டு ..
பத்து ரூபாய் பாலாஜி அலுவலகத்தில் ரெய்டு ..
No comments:
Post a Comment