Thursday, June 8, 2023

சில காரணங்கள்..

 பிப்ரவரி 8,2023 ல் ரயில் எண் 12649, சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயில் 'சரியான சிக்னல் ஆனால் தவறான பாதைக்கு இணைப்பு' தரப்பட்டுள்ளதை கண்டறிந்த ரயில் ஓட்டுநர் கவனமாக, விரைவாக செயல்பட்டு ரயிலை நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இந்த சம்பவம் குறித்து உயரதிகாரிகளுக்கு அதாவது தென் மேற்கு ரயில்வே மண்டல ஜெனரல் மேனேஜர் வரை புகார் தரப்பட்டுள்ளது.
இதே சூழலை தான் தென் கிழக்கு ரயில்வே மண்டலத்தை சார்ந்த ஒடிசாவின் பாலாசோர் ஜங்ஷனில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் சந்தித்தது. அதாவது 'சரியான சிக்னல் ஆனால் தவறான பாதை திருப்பம்'.
ஆனால் ட்ரைவர் கவனமாக இல்லாததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக நான் எண்ணுகிறேன்.
காரணம் என்னவென்றால்,
சம்பர்க் கிராந்தி விபத்து ஏற்படும் சூழலை சந்தித்தது பகல் நேரம் சுமார் 2.00 pm to 3 pm. அதனால் ரயில் ஓட்டுநர் விழிப்புடன் இருந்ததால் சிறிது தூரத்தில் வரும் போதே நேர்வழிக்கு சிக்னலும், சிக்னலில் இருந்து சில மீட்டர் தொலைவில் பாதை லூப் வழியில் இணைக்கப்பட்டுள்ளதையும்,
லூப் வழி தடத்தில் சரக்கு ரயில் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததையும் கவனித்த நொடியில் துரிதமாக செயல்பட்டு, ரயிலின் வேகத்தை குறைத்து நிறுத்தியதுமே விபத்து தவிர்க்கப்பட முக்கிய காரணம்.
இங்கே கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்
பகல் வேளையில், ஓட்டுநர் சிக்னலை மட்டும் பார்த்து ரயிலை செலுத்தியிருந்திருந்தால், கண்டிப்பாக விபத்து நிகழ்ந்திருக்கும், ஆனால் அவர் தனது வழித்தடம், மற்றுமொரு லூப் வழித்தடத்திற்க்கு இணைப்பு தரப்பட்டுள்ளதை கவனமாக பார்த்து உஷாரானதால் தான் அவரால் ரயிலை நிறுத்த முடிந்தது.
ஆனால் ஒடிசா ரயில் விபத்து நிகழ்ந்த நேரம் மாலை 6.55, அதாவது இருள் கவிழும் நேரம், இந்த நேரத்தில் லைட் வெளிச்சம் கூட முழுமையாக உணர முடியாது.
அதாவது நல்ல இருட்டில் வெளிச்சம் பளீரென்று குறிப்பிட்ட தூரம் வரை தெரியும். ஆனால் இருள் கவிழும் சூழலில் போதுமான பளீரென்ற வெளிச்சம் கிடைக்காது.
அதேநேரத்தில் ரயில் ஓட்டுநர் ரயில் பாதையில் கவனம் செலுத்தாமல், சிக்னலை மட்டும் கவனித்து இயங்கி இருப்பார்.
அவரால் பல மீட்டர்களுக்கு அப்பால் கொடுக்கப்பட்டிருந்த தவறான லூப் வழித்தட இணைப்பினை பிரேக் பயன்படுத்த போதுமான தூரத்திற்கு முன்பாக கண்டறிந்திருக்க வாய்ப்பு கிடைத்திருக்காது.
அவர் முழு கவனத்தை பெற முடியாததற்கு முக்கிய காரணம், இருள் கவிழும் நேரம் மற்றும் இரவு நேரம். ஓட்டுநரின் முழு கவனமும் சிக்னல் மீது தான் இருக்கும். லைட் வெளிச்சம் குறிப்பிட்ட சில மீட்டர்களுக்குள் மட்டுமே தெரியும் என்ற நிலையில், அவரால் முன்னதாகவே விபத்து ஏற்படக்கூடிய சூழலை உணர்ந்திருக்க முடியாது. அருகில் நெருங்கும் வேளையில் தான் தனது ரயில் தவறான பாதையில் திரும்புவதை உணர்ந்திருப்பார்.
ஆனால் அதற்குள் காலம் கடந்திருக்கும், பிரேக் அடிக்கப்பட்டும் பயனளித்து இருக்காது. அங்கே விபத்து நிகழ்ந்துள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதே நேரத்தில் ஹௌரா எக்ஸ்பிரஸ் அருகில் உள்ள வழித்தடத்தை கடந்துள்ளதால், விபத்து கொடூரமான விபத்தாக மாறியுள்ளது.
இதுதான் அன்றைய தினம் நடந்திருக்கும்.
பதிவு விபத்திற்கு யார் காரணம் என்பது குறித்ததல்ல. விபத்து எப்படி நிகழ்ந்திருக்கும் என்பது குறித்தது.
ஆனால் முந்தைய புகார் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தான் விளக்கம் தர வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...