" _*"தாத்தா* எங்க டீச்சர் இன்னிக்கு * உலக அதிசயங்கள் ஏழு *தெரியுமா..? என்று கேட்டாங்க. எனக்கு தெரியலை; உங்களுக்கு தெரியுமா தாத்தா..? சொல்லுங்க"_
என தாத்தாவை கேட்டான் அவரின் செல்லப் பேரன்.
_"அடே பயலே., எனக்கு தெரிந்த வாழ்வின் ஏழு அதிசயங்கள் வேற; புத்தகங்களில் இல்லாதது; தனியாக அதற்கு பாடமும் கிடையாது"_ என்றார்.
_"உனக்கு சொன்னால் புரியுமா என்று தெரியவில்லை. இருந்தாலும் ஒரு நாள் உனக்கும் தெரிந்துதானே ஆக வேண்டும். அதை இப்போதே தெரிந்து கொள்ளேன்."_
*1. உங்க அம்மா* இருக்கிறாளே அவள் தான் இந்த உலகில்.,
அதாவது உன் வாழ்க்கையில் *முதல் அதிசயம்.*
_"என்ன தாத்தா சொல்றீங்க நீங்க..??"_
_"ஆமாண்டா., அவள் தாண்டா உன்னை இந்த உலகத்திலேயே வரவேற்ற முதல் மனுஷி."_
*2. உங்க அப்பா* இருக்கிறாரே அவர்தான் *இரண்டாவது அதிசயம்.* _நீ சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும்_ என்று என்ன பாடெல்லாம் பட்டு இருக்கிறார் என்று உனக்கு தெரியுமா..??''
*3.* _"எது உனக்கு வேண்டுமோ அதை மற்றவரோடு பகிர்ந்து கொள்ள வைத்த., பாசம் என்றால் என்ன என்று புரிந்து கொள்ள உதவிய ஜீவனாக உதித்தவர்கள்._
எனவேதான் *உன்னுடன் கூடப் பிறந்தவனோ., பிறந்தவளோ* தான் *மூன்றாவது அதிசயம்*.
''போதும் போதும்'' என்று நான் ஓடி விட்டாலும் அருகில் இருந்த கமலா டீச்சர் _"தாத்தா சார் மேலே சொல்லுங்க., குழந்தைக்கு என்ன புரியும். எனக்கு சொல்லுங்க"_ என்றாள்., அடுத்த வீட்டுக்காரி., பேசாமல் இதுவரை முதலிருந்து தாத்தா பேசியதை எல்லாம் கேட்டு கொண்டிருந்தவள்.
*4. "நண்பனோ., நண்பி*—யோதான் வாழ்வில் *நான்காவது அதிசயம்.* விசால புத்தி., மனோபாவம்., மற்றவரை புரிந்து கொள்ளும் தாராள மனம்., நட்பு என்று ஒருவரை ஒருவர் நேசிக்கும் சுபாவம் வர காரணமானவர்கள்.
*5.* அடுத்தது குறைகளை நோக்காமல்., நிறைகளை மட்டுமே பார்க்கும் தன்மை. யாரால் முதலில் வந்தது என்றால் உன் மனதை முதலில் கொள்ளை கொண்ட *பெண்ணோ / ஆணோ*—தான். உலகையே., பெற்றோரையோ., மற்றோரையோ., அவனுக்காகவோ / அவளுக்காகவோ எதிர்க்கும் தைரியம் வந்தது அந்த அதிசயப் பிறவியால்தான். எனவே அந்த ஜீவனே வாழ்வில் கண்ட *ஐந்தாவது அதிசயம்., மனைவி/கணவன்.*
*6. ஆறாவது அதிசயம் என்ன தெரியுமா..ரர
*
உன் *பிள்ளையோ., பெண்ணோ*—தான் .
உன்னை சுயநலமற்றவனாக மாற்றிய முதல் ஜீவன். உன்னை விட மற்றவர் நலம் பற்றி நீ அறிய., எண்ணங்கள் உன் மனதில் உதிக்க., வைத்த அபூர்வ பிறவி. பிள்ளைக்கோ பெண்ணுக்கோ விட்டுக் கொடுக்காத., தியாகம் செய்யாத அப்பனோ., அம்மாவோ உலகிலேயே இல்லையே.
_"அசாத்தியமாக இருக்கிறது சார்; கடைசி ஏழாவது அதிசயம் என்று எதை சொல்ல்லப் போறீங்க..
"_ கமலா.
*7.* வாழ்க்கையிலே இன்னும் என்னம்மா பாக்கி இருக்கு. கடைசியாக இதுதான் *ஏழாவது அதிசயம்* என்று கொள்வது ஒருவனது *பேரன்., பேத்தி* தான்....
_" தாத்தாக்களே / பாட்டிகளே., உங்களுக்கு மீண்டும் உலகில் வாழ வேண்டும்_ என்ற ஆசையை., எண்ணத்தை முதலில் வளர்த்த அதிசயங்கள். திரும்பவும் உங்கள் வாழ்க்கை சக்கரம் உருண்டோட காரணமானவர்கள் இந்த அற்புதம் *பேரன்., பேத்திகள்*—தானே. அவர்களுக்காக நீங்கள் டான்ஸ் ஆடலையா., பாடலையா., குதித்து தூக்கிக் கொண்டு ஓடி விளையாடவில்லையா..
சிலர் குட்டிக்கரணம் கூட போட்டதில்லையா..
அப்படியென்றால் இது நிச்சயம் அதிசயம் இல்லையா..
"
ஏன்., நம் *குடும்பமே ஒரு அதிசயம்தான்.* நாம் எப்படி அதிசயத்தை வெளியில் தேடுகிறேமோ., அது போல் மகிழ்ச்சியையும் நம் உள்ளே வைத்துக் கொண்டு., வெளியில் தேடுகிறோம்.
வாழ்ந்து வரும் வாழ்க்கை அவரவர் வாழ்வதற்கே;
அது முழுமை பெறுவதே *அதிசயத்துக்கு எல்லாம் அதிசயம்*.
_*அன்பை வெளிக் காட்டுங்கள்*_
_வாழ்வுக்கு பின் பிறகு என்னதான் கொண்டு செல்லப் போகிறீர்கள்..
_
உலகின் *ஏழு அதிசயங்கள்*
வேறெங்கும் இல்லை.
நம்முடன்... நம்முடனேயே...
No comments:
Post a Comment