Thursday, June 8, 2023

விழுப்புரத்தில் திரௌபதியம்மன் கோவிலை பூட்டியுள்ளார்களாம். ஏனெனக் கேட்டால், வேறு சாதி மக்களை உள்ளே விடவில்லையாம்.

 ஒவ்வொரு குலதெய்வக் கோவிலிலுமே இந்த நடைமுறை உண்டுதானே, என் குலதெய்வமான திரௌபதியம்மன் கோவிலிற்குள் எங்கள் விழாவில் யார் யார் கலந்துகொள்ளவேண்டும் என நாங்கள் கூறுவதில் தவறில்லையே, ஏனெனில் அது எங்களது பட்டா இடம் எனும்போது, யார் யார் வரவேண்டும் என்பதினைக் கூற எங்களுக்கு உரிமையுள்ளது அல்லவா?

இதுவே பொதுக்கோவிலில் அனுமதிக்கவில்லையெனில் அது குற்றமாகும். மற்றும் உண்மையில் சாமி கும்பிட செலபவர்கள், பிரச்சனை செய்யமாட்டார்கள். உதாரணத்திற்கு ஒரு கிராமத்தில் ஒரு குலதெய்வ திருவிழா நடக்கிறது என்றால், அந்த கிராமத்திலிருக்கும் அத்தனை (வேறு) குலதெய்வ பூசாரிகளின் வீடுகளையும் அழைத்து மரியாதை தருவார்கள் (அதில் தாழ்த்தப்பட்டோர் என அரசு கூறும் சாதியினரும் உண்டு). விஷயம் அப்படியிருக்க, பிறரது இடத்திற்குள் எங்களுக்கும் சரிசமமான மரியாதை வேண்டும் என்பது எப்படி சாத்தியம்.
என் சாதியைச் சார்ந்த வேறு குலதெய்வம் குடும்பிடும் கோவிலுக்கு நாங்கள் சென்றாலும் எங்களுக்கு உரிய இடத்தில்தானே நாங்கள் நிற்கவேண்டும், ஏனெனில் அது அவர்களது குலதெய்வக் கோவிலல்லவா?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...