Wednesday, June 14, 2023

திமுகவின் பெயரை கெடுக்க வேண்டுமா?

 பெருமதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய #ஆர்எஸ்பாரதி அவர்களுக்கு,

செந்தில் பாலாஜியை கரூர் தேர்தல் பிரச்சாரத்தில் ஊழல்வாதி எனச் சொல்லி, கழுவி ஊற்றிய பெருமை கொண்டவர் அன்றைய செயல் தலைவரும், இன்றைய முதல்வருமான முக ஸ்டாலின். அதே செந்தில் பாலாஜியை திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்த்தது மட்டுமல்லாமல், கட்சியில் பதவியும் கொடுத்தது முக ஸ்டாலின். மின்சாரம், கலால் மற்றும் ஆயத்தீர்வை ஆகிய முக்கியமான துறைகளுக்கு அவரை அமைச்சராக்கியதும் முக ஸ்டாலின்.
இவை அனைத்தும் நடந்த போதும் நீங்கள் திமுகவில் தான் இருந்தீர்கள். ஒரு தடவையாவது செந்தில் பாலாஜி மேல் அடுக்கடுக்காக ஊழல் புகார்களைச் சொன்னது திமுக தான் என முதலமைச்சர் ஸ்டாலினிடம் நீங்கள் தெரிவித்தீர்களா? நாமே ஊழல் குற்றச்சாட்டுகளைச் சொல்லிவிட்டு பின்பு நாமே அந்த நபருக்கு மந்திரி பதவி கொடுத்தால் எதிர்காலத்தில் பிரச்சனை வரும் என எடுத்துச் சொன்னீர்களா?
இப்போது செந்தில் பாலாஜி வசமாக சிக்கியதும் அவர் மேல் எடுக்கப்படும் நடவடிக்கைகள் திமுகவின் பெயரைக் கெடுக்கிறது எனக் கூப்பாடு போடுவது ஏன்? இனிமேல் தான் யாராவது திமுகவின் பெயரை கெடுக்க வேண்டுமா?
டாஸ்மாக்கில் பத்து ரூபாய் அதிகம் பணம் வாங்குகிறார்கள் என்பதைக் கூட அறியாத ஒருவரை முதல்வராக வைத்திருக்கும் திமுகவிற்கு, அதைவிடப் பெரிய அவப்பெயர் வேறு என்ன வந்துவிடப் போகிறது?
செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள வழக்கில் புகார் கொடுத்தது யாரு ?
தி மு க
கைது செய்யணும்னு போராட்டம் செஞ்சது யாரு ?
தி மு க
இப்ப கைது பழிவாங்கும் நடவடிக்கைன்னு சொல்றது யாரு ?
தி மு க🤭🤭

May be an image of 3 people
All reactions:

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...